டெல்லி | எல்.முருகன் இல்லத்தில் வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்த பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்ப்பெண்கள் வரையும் புள்ளிக்கோலம் போன்று பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்ததுதான் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்புதிய தலைமுறை

தமிழ்ப்பெண்கள் வரையும் புள்ளிக்கோலம் போன்று பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்ததுதான் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள் தமிழிசை சவுந்திரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் திருவிழாவான பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, உழவர் தோழனான மாட்டிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் கண்டுகளித்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொங்கல் கொண்டாடும் தமிழ் மக்கள் உட்பட மகரசங்கராந்தி கொண்டாடும் பிற மொழி மக்களுக்கும் தனது வாழ்த்துகளை கூறினார். மேலும், “ நமது நாட்டில் சிறுதானியங்களை கொண்டு இளைஞர்கள் பலர் ஸ்டார் அப் கம்பெனிகளை உருவாக்கி வருகின்றனர். "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளுக்கு இணங்க நன்கு கற்றறிந்தவர்கள், நல்ல திறமையான வியாபாரிகள், நல்ல உழைப்பாளிகள் இந்த மூவரும் இணைந்து நல்ல நாட்டை உருவாக்குகிறார்கள் . அதுமட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு விழாவுக்கும், விவசாயிகளின் பங்கு முக்கியத்துவமானது.

தமிழ்ப்பெண்கள் புள்ளி வைத்து கோலமிடுவதில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. அதனையே பல வண்ணங்களாக மாற்றி கலையாகவும் மாற்றினர்.

பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
பிரதமர் வருகையால் குருவாயூர் கோயிலில் சுரேஷ் கோபி மகள் தவிர்த்து மற்றவர்கள் திருமணம் ஒத்திவைப்பா?

கோலத்தை போன்றதுதான், நமது நாட்டின் கலாச்சாரமும் . பல்வேறு புள்ளிகளை ஒன்றிணைப்பதன் மூலம் தான் அற்புதமான கலை கிடைக்கிறது. அதேபோலதான் நாட்டில் பல்வேறு தரப்பினரும் ஒன்றாக இணைந்து செயல்படும் போது நமது நாடு மிக அழகானதாக மாறும் . இவ்வாறு மக்களை இணைக்கும் வேலைகளைதான் காசி தமிழ்ச்சங்கமம், செளராஷ்ட்ரா தமிழ் சங்கமம் உள்ளிட்டவை செய்து வருகிறது.” என்று பெருமிதம் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்ல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகை மீனா, டெல்லி வாழ் தமிழ் மக்கள், பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com