பிரதமர் வருகையால் குருவாயூர் கோயிலில் சுரேஷ் கோபி மகள் தவிர்த்து மற்றவர்கள் திருமணம் ஒத்திவைப்பா?
செய்தியாளர்: S.சுமன்
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி குருவாயூர் கோயிலில் நடைபெற உள்ள ஒரு திருமணம் கூட ஒத்திவைக்கப்படவில்லை என்றும், அனைத்து திருமணங்களும் நடத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 17 ஆம் தேதி பிரதமர் மோடி குருவாயூர் கோயிலுக்கு வருவதால் வேறு திருமணங்கள் நடக்காது என்று தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், அன்றைய தேதியில் பதிவு செய்துள்ள அனைத்து திருமணங்களும் நடைபெறும் என கோயில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
16 ஆம் தேதி கொச்சி மாவட்டம் நெடும்பாசேரி வரும் பிரதமர் மோடி அங்கு Road show-ல் கலந்து கொள்வதாகவும் அதைத் தொடர்ந்து 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு குருவாயூர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், 8.45 மணிக்கு சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.