வயநாடு நிலச்சரிவிற்கு காரணம்... மத்திய அமைச்சரின் கருத்தும் - முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனமும்

வயநாடு நிலச்சரிவிற்கு காரணம், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும், குடியிருப்புகளும்தான் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கூறியது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பூபேந்திர யாதவ் - பினராயி விஜயன்
பூபேந்திர யாதவ் - பினராயி விஜயன்புதிய தலைமுறை
Published on

வயநாடு நிலச்சரிவிற்கு காரணம், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும், குடியிருப்புகளும்தான் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கூறியது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை கூறிய அவர், “வயநாடு பேரிடரை அரசியல் சுயநலத்திற்காக சிலர் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. மக்களுக்கு யதார்த்தத்தை புரியவைக்க வேண்டியவர்களே இப்படி செய்வது வேதனைக்குரிய விஷயம். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவின் கருத்து அதில் ஒன்றாகிவிட்டது.

Wayanad Landslide
Wayanad LandslidePT

அரசு ஒத்துழைப்போடு நடக்கும் சட்டவிரோத குடியிருப்பும், நில ஆக்கிரமிப்பும்தான் நிலச்சரிவிற்கு காரணம் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப் படுத்துவதற்கு சமம். உயிரை விட்ட மக்களை இந்த ரீதியில் அவமானப்படுத்தக் கூடாது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைக்கு ரூ. 1 கோடி: ஆர்எஸ்எஸ் பிரமுகர் மிரட்டல்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களை "குடியேற்றக்காரர்கள்" என்று கூறி ஒதுக்கும் பிரச்சாரத்திற்கு, பொறுப்புள்ள மத்திய அமைச்சர் துணைபோவது நியாயமற்றது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com