\

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைக்கு ரூ. 1 கோடி: ஆர்எஸ்எஸ் பிரமுகர் மிரட்டல்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைக்கு ரூ. 1 கோடி: ஆர்எஸ்எஸ் பிரமுகர் மிரட்டல்
Published on: 

மத்திய பிரதேசத்தை சார்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரவத் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு தனது சொத்துகளை விற்றாவது ஒரு கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சரும் மூத்த இடதுசாரி தலைவருமான பினராயி விஜயன்தான் கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் என்று சந்திரவத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பிரிவினையை உண்டாக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சந்திரவத் பினராயி விஜயன் தலைக்கு ஒரு கோடி கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com