அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தடை விதிக்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில், அலகாபாத் உயர்நீதிமன்றம்
அயோத்தி ராமர் கோயில், அலகாபாத் உயர்நீதிமன்றம்ட்விட்டர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து வரும் 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு கோலாகலமான முறையில் நடைபெற்று வருகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நெருங்கிவரும் சூழலில் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ”இனி அயோத்தி நகரம் திருவிழாக்களில் மூழ்கித் திளைக்கும். இனி தோட்டாக்கள் சீறிப் பாயாது. ராமர் கோயில் திறப்பு விழா நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இதற்கான போராட்டத்தின் ஒவ்வோர் அடியிலும் உடனிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய அயராத முயற்சியாலும், வழிகாட்டுதலாலும் இந்த 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது” எனத் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில், அலகாபாத் உயர்நீதிமன்றம்
அயோத்தி ராமர்கோயிலில் இருந்து 15 நிமிடம்: ரூ14.5 கோடிக்கு 10 ஆயிரம் சதுரஅடியில் இடம்வாங்கிய அமிதாப்!

இப்படி அயோத்தி நகரமே கோலாகலமாய்க் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த போலா தாஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ’அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்து மாதங்களில் ஒன்றான 'பவுஷ்ய' மாதத்தில் எந்தமத நிகழ்வுகளும் நடத்தப்படுவது இல்லை. தவிர, கோயில் கட்டுமானம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. அப்படி, முழுமையடையாத கோயிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாஜக இந்த விழாவை நடத்துகிறது. ஆகையால் இதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ட்ரம்ப் வைத்த காட்டமான விமர்சனம்; போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த விவேக் ராமசாமி! பின்னணிஎன்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com