“வர்ணாசிரமத்தை கொண்டுவரப் பார்க்கிறீர்களா?” - ஜெகதீப் தன்கருக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!

ஜெக்தீப் தன்கரின் கருத்தால் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தியானதுடன், அவருடைய கருத்துக்கும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜெக்தீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கே
ஜெக்தீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கேஎக்ஸ் தளம்

18வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. இந்தத் தேர்தலில் வென்ற எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று காரசாரமாகப் பேசினர். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்துப் பேசினார்.

இதற்கிடையே மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் சபை நடவடிக்கை இன்று தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரமோத் திவாரி எழுந்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டுப் பேசினார். அப்போது ஜெய்ராம் ரமேஷைப் பார்த்து ஜெக்தீப் தன்கர், “நீங்கள் புத்திசாலி, திறமையானவர். நீங்கள் உடனடியாக வந்து கார்கேவின் இருக்கையில் அமரவேண்டும். ஏனென்றால் கார்கேவின் செய்ய வேண்டிய பணியை நீங்கள் அதிகமாக செய்கின்றனர்” என்றார்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

ஜெக்தீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கே
“பிரதமர் பதவியையோ அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். இத்தகைய சூழலில்தான் கார்கேவின் பணியை ஜெய்ராம் ரமேஷ் செய்வதாக ஜெக்தீப் தன்கர் கூறினார். ஜெக்தீப் தன்கரின் இந்த கருத்தால் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தியானதுடன், அவருடைய கருத்துக்கும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், ”உங்களின் மனதில் வர்ணாசிரமம்தான் இருக்கிறது. அதனால்தான் என்னைத் தாழ்த்தி ஜெய்ராம் ரமேஷ் என்னுடைய இடத்துக்கு வர வேண்டும் என்று பேசுகிறீர்கள். வர்ணாசிரமத்தை கொண்டுவரப் பார்க்கிறீர்களா? அதனால்தான் நீங்கள் அவரை புத்திசாலி என்று கூறியுள்ளீர்கள்'' என்றார். அதாவது ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கார்கே ஆகியோரின் ஜாதிரீதியாக அங்கே விமர்சனம் செய்யப்பட்டதாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து குறுக்கிட்ட ஜெக்தீப் தன்கர், ”நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் உங்களை மதிக்கிறேன். நான் உங்களுக்காகத்தான் இருக்கிறேன். உங்களுக்கு அரசியலில் 56 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. ஒவ்வொரு நேரத்திலும் ஜெய்ராம் ரமேஷ் கமெண்ட்டுகளை சொல்லி உங்களுக்கு உதவ நினைக்கிறார். இந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டிய சூழல் உள்ளது'' என்றார்.

இதையும் படிக்க: 2 மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரை.. முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்! கண்டித்த சபாநாயகர்!

ஜெக்தீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கே
"பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள்" - மல்லிகார்ஜுன கார்கே

இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்த மல்லிகார்ஜுன கார்கே, அருகே இருந்த சோனியா காந்தியை காட்டி, ”இவர்தான் என்னை இந்த இடத்திற்கு உருவாக்கினார். நான் இப்போது அவர் அருகே உட்கார்ந்திருக்கிறேன். மற்றவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்பட உங்களாலும் என்னை இப்படி உருவாக்க முடியாது. என்னை உருவாக்கியது மக்கள்'' என்றார்.

கார்கேவின் இந்த பேச்சைக் கேட்டுப் பதிலளித்த தன்கர், “நீங்கள் ஒவ்வொரு முறையும் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று பேச முடியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தலைவர் இருக்கைக்கு அவமரியாதை செய்ய முடியாது. ஏனென்றால், நீங்கள் திடீரென்று எழுந்து நின்று, ’நான் என்ன சொல்கிறேன்’ என்று புரியாமலேயே பேசுகிறீர்கள். இந்த நாட்டின் வரலாற்றில் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகளில் உங்களைப்போல் யாரும் அலட்சியம் செய்தது இல்லை. நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. உங்களின் கண்ணியம் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் நான் உங்களின் கண்ணியத்தைக் காக்கவே முயற்சித்தேன்” எனக் கூறினார். இதனால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: அதானி விவகாரம்| செபி அனுப்பிய நோட்டீஸ்.. புதிய நிறுவனத்தை இழுத்துவிட்ட ஹிண்டன்பர்க்!

ஜெக்தீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற மல்லிகார்ஜுன கார்கே - பிரதமரிடம் எழுப்பிய முதல் கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com