Mallikarjun Khargept desk
இந்தியா
“பிரதமர் பதவியையோ அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் பதவியையோ அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் பதவியையோ அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் நலனும் மதச்சார்பின்மையுமே காங்கிரஸ்-க்கு முக்கியம் எனவும் அவர் பேசியிருக்கிறார்.
Mallikarjun Khargept desk
ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் சமூகநீதி காக்கப்படுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியம் எனவும் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியவற்றை, கீழ்க்காணும் வீடியோவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.