கால்களுக்கு குறுக்கே வந்த பாம்பு; தண்ணீரில் மெய்மறந்து திருமண போட்டோ ஷூட்டில் மூழ்கிய இணையர்! வீடியோ

போட்டோஷூட்டின் போது குறுக்கே பாம்பு வந்ததால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
போட்டோஷூட்
போட்டோஷூட் pt web

தற்போதைய காலங்களில் திருமணத்திற்கு முன் ஒரு போட்டோஷூட், திருமணத்திற்கு பின்பு ஒரு போட்டோ ஷூட், திருமணத்தின் போது எடுக்கப்படும் போட்டோஷூட் என புகைப்படங்களே நிகழ்வுகளின் போது முக்கியத்துவம் பெறுகிறது.

அந்நிகழ்வுகளின் போது புகைப்படக்காரர்கள் மணமக்களை படுத்தும் பாடு தனி கவனத்தைப் பெறும். காலம் முழுவதும் இருக்கப்போகும் புகைப்படங்கள் ஆதலால் அதை கொண்டாடி எடுக்க வேண்டுமென்பதே பலரது கருத்தும். அப்படி மேற்கொள்ளப்படும் போட்டோஷூட் தற்போது திரைப்படங்கள் எடுப்பது போல் வெளிப்பகுதிகளுக்கு சென்றெல்லாம் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக பசுமையான இடங்கள், மலைப்பகுதிகள், நீர் உள்ள பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் நாசிக்கின் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 5.4 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

parshu_kotame_photography150 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து புகைப்படக் கலைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் இணையர்களது திருமணத்தின் முந்தைய போட்டோஷூட்டின் போது பாம்பு ஒன்று வந்துள்ளது.

காட்டுப்பகுதி பகுதி போல் இருக்கும் பகுதியில் இணையர் தண்ணீரில் உட்கார்ந்துள்ளனர். வெள்ளை நிறத்தில் புகை வரும்படியான பொருள் ஒன்று தண்ணீரில் வீசப்பட்டதும் சுற்றிலும் புகை வருகிறது. புகைப்படக்காரர் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த வேளையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது.

தண்ணீரில் வந்த பாம்பு மணப்பெண்ணின் கால்களுக்கு மேல் சென்றது. இதைப் பார்த்து பதறிய மணப்பெண்ணை மணமகன் சமாதானம் செய்யும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com