மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை
மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைpt

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை!

இந்த சூழலில், பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்தது.
Published on

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், அந்நாட்டிற்கு எதிராக எந்த மாதிரியாக நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் குழுவினர், கடந்த 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையை கையில் எடுத்த மத்திய அரசு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டம், மத்திய அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றை நடத்தி பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எந்தவகையில் பதிலடி கொடுக்கலாம் என ஆலோசித்து வருகிறார்.

அதன்படி, பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தலைமை தளபதி, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் சார்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. இதில், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படவும், எல்லை பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சூழலில், பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி பி.எம்.சின்ஹா, முன்னாள் தெற்கு பிராந்திய ராணுவ தளபதி ஏகே சிங், முன்னாள் ரியர் அட்மிரல் மாண்டி கன்னா ஆகியோர், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங், ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி வெங்கடேஷ் வர்மாவும், அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை
Headlines|சாதிவாரி கணக்கெடுப்பிற்கு அனுமதி முதல் IPLலிருந்து வெளியேறிய CSK வரை!

முன்னதாக, முப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்ததை சுட்டிக்காட்டி பேசிய பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார், பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருக்கும் எல்லைப் பகுதிகளில் நவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களை நிறுவி பாதுகாப்பு படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com