Headlines|சாதிவாரி கணக்கெடுப்பிற்கு அனுமதி முதல் IPLலிருந்து வெளியேறிய CSK வரை!
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை. மத்திய அரசு பதில் நடவடிக்கை.
சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன் அனைத்து தரப்பினருக்கும் உரிய உரிமையை தரும் முடிவு. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் நாட்டிலுள்ள 90% மக்கள் அதிகாரம் பெறுவார்கள் என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கருத்து. மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும் என்றும் உறுதி.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு. பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு.
வீட்டுக்கடன் தவணையை செலுத்தவில்லை என இரவில் 7 வீடுகளை பூட்டிய தனியார் நிதி நிறுவனத்தினர். வீட்டை பூட்டி மின்சாரத்தை நிறுத்தியதால் இரவில் தங்க இடமின்றி தவித்த குடும்பங்கள்.
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகப்பட்டினம் இளைஞர் கணேஷ்குமார் கைது.இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு.
வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு நூதனமுறையில் எதிர்ப்பு. இரவு 9 மணி முதல் கால் மணி நேரத்திற்கு வீட்டு விளக்குகள் அணைப்பு.
கிருஷ்ணகிரி அருகே கருவின் பாலினத்தை கண்டறிந்த மருந்து கடை உரிமையாளர் கைது. ஸ்கேன் கருவி, பிற உபகரணங்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்த மருத்துவத்துறை அதிகாரிகள்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகரலாபம் 50% அதிகரிப்பு. ஆண்டின் முதல் 3 மாதங்களில் 7 ஆயிரத்து 625 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அறிவிப்பு.
வரி யுத்தத்தால் தங்களை விட சீனாவுக்கே அதிக பாதிப்பு என அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சரிந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் கருத்து.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ தொலைபேசி மூலம் பேச்சு. பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தல்.
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்பிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.