over 1000 active corona virus cases india
கொரோனாpt web

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. 7 பேர் உயிரிழப்பு!

சீனா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது தற்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.
Published on

சீனா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது தற்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 752 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 பேரும் மகாராஷ்டிராவில் 209 பேரும் டெல்லியில் 104 பேரும் குஜராத்தில் 83 பேரும் தமிழகத்தில் 69 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.

over 1000 active corona virus cases india
கொரோனா தொற்றுஎக்ஸ் தளம்

தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், 2023 டிசம்பரில் தோன்றிய ஜேஎன் 1 (JN.1) என்ற வகையிலிருந்து உருமாறிய எல்எஃப் 7 (LF.7)மற்றும் என்பி 1.8 (NB.1.8) ஆகிய வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், 2023 டிசம்பரில் தோன்றிய ஜேஎன் 1 (JN.1) என்ற வகையிலிருந்து உருமாறிய எல்எஃப் 7 (LF.7)மற்றும் என்பி 1.8 (NB.1.8) ஆகிய வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கொரோனா பரவல் முன்பை போல ஒரு பருவகாலமாக இல்லாமல், ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ளூர் பரவலை மட்டுமே ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கோள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

over 1000 active corona virus cases india
மீண்டும் பரவும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com