பேருந்தில் முதியவர் கன்னத்தில் விழுந்த அறை.. துணிச்சலாக தட்டிக் கேட்ட இளம்பெண்.. வைரலாகும் வீடியோ..!
அரசுப் பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இருக்கையை விட்டு எழுந்த பெண் ஒருவர் அங்கிருந்த முதியவரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார். அதில் முதிவர் நிலைகுலைந்து போனார்.. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்துக்குள் நடந்தது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
கேரளா மாநிலத்தில் அரசுப் பேருந்து ஒன்று 20 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. அதே பேருந்தில் சிறுமி ஒருவர் அதில் பயணம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு அருகில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமியின் சகோதரி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சிறுமியின் சகோதரி திடீரென இருக்கையை விட்டு எழுந்து முதியவரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார். இதில் அந்த முதியவர் நிலைகுலைந்து போனார். இதோடு விடாமல் அந்த முதியவரை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பயந்து போன முதியவர் கை கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.