விவாகரத்து ஆகாமலே 2ஆவது திருமணம் செய்தாரா ரங்கராஜ்?
மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி ரங்கராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகரும், சமையல்கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், தனக்கும் திருமணமாகிவிட்டதாக புகைப்படத்துடன் அறிவித்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய்கிரிசில்டா, அடுத்த சில மணிநேரத்திலேயே தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விவகாரத்து ஆகவில்லையே, அப்படி இருக்க 2ஆவது திருமணம் செய்து கொள்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிலர் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியிடம் அனுமதி பெற்று திருமணம் செய்திருப்பார் என கருத்து தெரிவிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்த சிலர் அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜின் இன்ஸ்டாகிராமை பார்த்த போது, அவர் தனது பெயரை மாற்றாமல் அப்படியே வைத்திருந்ததும், அவரது கடைசி பதிவில் தனது குழந்தைகள் மற்றும் கணவர் ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருப்பது தெரியவந்தது. அப்படி இருக்கும் போது விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது மனைவியுடன் அவர் வாழ்ந்து வருகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஸ்ருதி ஒரு வழக்கறிஞர் . ரங்கராஜ் ஸ்ருதி தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.