ஒடிசா: காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு; இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

ஒடிசா: காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு; இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

ஒடிசா: காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு; இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவைத் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பிபிலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 17-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அஜித் மங்கராஜ் (53) கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை அன்று பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அஜித் மங்கராஜ் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

மங்கராஜ் மரணம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் வேட்பாளர் மறைவையடுத்து, வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோகனி தெரிவித்துள்ளார். மங்கராஜுக்கு பதிலாக புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கலாம்; ஆனால், மற்ற கட்சிகள் வேட்பாளரை மாற்ற அனுமதி இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அஜித் மங்கராஜ் மறைவுக்கு ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com