திருப்பூர் | உயிரிழந்த மூதாட்டியை மயானம் வரை சுமந்து சென்ற திராவிட கழக பெண்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, திராவிடர் கழக பெண்கள் மயானம் வரை சுமந்து சென்றனர்.
திருப்பூர்
திருப்பூர் முகநூல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மெட்ரோ சிட்டி பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணிக்கு வயது 83.

மூதாட்டி உடலை சுமந்து சென்ற திராவிட கழக பெண்கள்
மூதாட்டி உடலை சுமந்து சென்ற திராவிட கழக பெண்கள்புதிய தலைமுறை

இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அங்கு வந்த திராவிடர் கழக பெண்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர்
கல்லிடைக்குறிச்சி | நிற்காமல் சென்ற ரயில் - பயணிகள் கடும் அவதி!

வழக்கமாக இறந்தவர் உடல்களை ஆண்களே மயானத்துக்கு தூக்கிச் சென்று இறுதி மரியாதை செய்துவந்த வழக்கத்தை மாற்றும் விதமாக, மூதாட்டியை தோளில் சுமந்து சென்று அப்பெண்கள் அடக்கம் செய்தனர். இது அங்கிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com