HEADLINES | பிகார் தேர்தல் முதல் அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிகார் தேர்தல் முதல் அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் வரை விவரிக்கிறது.
பிகார் சட்டமன்றத்திற்கு இன்று நடைபெறுகிறது முதற்கட்ட தேர்தல்... 121 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க ஏற்பாடு...
அரியலூர், பெரம்பலூர், திருச்சி உட்பட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை... தமிழகத்தில் நாளை மறுநாள் வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரியமில வாயு வெளியீடு வீதம் அதிகரிப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மாருதி நிறுவனம் இந்திய சந்தையில் 3 கோடி கார்களை விற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த 3 கோடி கார்களில் ஆல்டோ கார்கள் அதிகபட்சமாக 47 லட்சமும் வேகன்ஆர் கார்கள் 34 லட்சமும் ஸ்விஃப்ட் கார்கள் 32 லட்சமும் விற்றுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
சட்டீஸ்கரில் 11 பேரை பலி கொண்ட ரயில் விபத்துக்கு பயணிகள் ரயில் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தண்ணீர் மாசை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உடனுக்குடன் மதிப்பிடும் ஒரு கருவியை கண்டுபிடித்தவருக்கு புகழ்பெற்ற ஜேம்ஸ் டைசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா... ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சோதனை மேற்கொண்டதால் பதற்றம்...
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு... வீராங்கனைகளின் அனுபவங்களை கேட்டு, மேலும் வெற்றிகளை பெற பிரதமர் வாழ்த்து...
தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு... மீண்டும் அணிக்கு திரும்புகிறார் ரிஷப் பண்ட்....
கமல்ஹாசன் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்... 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என அறிவிப்பு...

