I-N-D-I-A கூட்டணி.. காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த நிதிஷ்குமார்! காரணம் இதுதான்!

இந்தியா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்த எழுச்சி தற்போது இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
I-N-D-I-A கூட்டணி, நிதிஷ்குமார்
I-N-D-I-A கூட்டணி, நிதிஷ்குமார்ட்விட்டர்

பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்ட நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

இதுகுறித்து அவர், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி தொடர்பாக எந்த வேலையும் நடைபெறவில்லை. நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களிடமிருந்து நாட்டை ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக, பாட்னாவிலும் பிற இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இண்டியா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அது தொடர்பான பணிகள் அதிக அளவில் நடைபெறவில்லை.

india
india pt web

மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில்தான் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நாங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி இழுத்து செல்வதற்காக ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் இப்போது இதைப் பற்றி கவலைப்படவில்லை. தற்போது ஐந்து மாநில தேர்தல் பணிகளில்தான் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, ஐந்து மாநில தேர்தல்களுக்குப் பிறகு, அவர்களே அனைவரையும் அழைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜெ., ரஜினி பாணியில் விஜய்.. ’காக்கா - கழுகு’ குட்டிக்கதை மூலம் பதிலடி கொடுத்தது யாருக்கு?

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதற்குப் பின் போபாலில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக I-N-D-I-A கூட்டணியின் கூட்டம் நடைபெறாத நிலையில் அடுத்த கூட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதன் காரணமாகவே அக்கூட்டணி, பலவீனமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

I-N-D-I-A கூட்டணி
I-N-D-I-A கூட்டணிட்விட்டர்

முன்னதாக, 3வது கூட்டத்தின்போது லோகோ, கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக் குழு, 5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் போன்றவை குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைவைத்தே நிதிஷ்குமார் பேசியிருப்பது I-N-D-I-A கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ’என்னைக் கேட்காமல் ஏன் டிரீம் செய்தாய்?’ - புருவத்தை அலங்காரம் செய்த பெண்ணிற்கு தலாக் கூறிய கணவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com