\
Om Prakash Mathur & Satheesan
Om Prakash Mathur & SatheesanX - V D Satheesan

ஆளுநர் மாளிகையில் அசைவத்துக்கு தடை.. கேரளாவில் சர்ச்சை!

கேரளா ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு!
Published on: 
Summary

கேரள மாநில புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர், ஆளுநர் மாளிகை சமையலறையில் அசைவ உணவுகளைத் தயாரிக்க தடை விதித்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உணவுத் தேர்வு தனிநபரின் உரிமை என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

செய்தியாளர் - M.மீரா

கேரளாவின் புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர், ஆளுநர் மாளிகை சமையலறையில் அசைவ உணவுகளை தயாரிக்க கூடாது என உத்தரவிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியுமான மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளாவின் 29-வது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்த விவகாரம் எழுந்துள்ளது.

Kerala Raj Bhavan
Kerala Raj BhavanANI

ஆளுநர் மாளிகை சமையலறையில் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ, பரிமாறவோ கூடாது என ஆளுநர் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த ஆளுநர் மாளிகை வட்டாரங்கள், ஆளுநர் தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்றும், அவருக்கான உணவு தயாரிக்கப்படும் சமையலறையில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன. மற்ற ஊழியர்களின் உணவுப் பழக்கங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கூறின.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் உண்ணுவதற்கு என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது என்றும், உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனிமனித சுதந்திரம் என்றும் அவர் கூறியுள்ளர். மேலும், அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கும் உரிமைகளை ஆளுநர் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும் உணவுத் தேர்வு தனிநபரின் உரிமை எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தனும் இந்த முடிவைக் கண்டித்துள்ளார். உணவைக் கூட மத அடிப்படையிலான பிரிவினைக்கான கருவியாக மாற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

Om Prakash Mathur & Satheesan
கேரள மாநில புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மாத்தூர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com