\
Om Prakash Mathur
Om Prakash Mathurpt web

கேரள மாநில புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மாத்தூர்

கேரளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் சிக்கிம் மாநில ஆளுநரான ஓம் பிரகாஷ் மாத்தூர் பதிவியேற்றார்.
Published on: 

கேரளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் சிக்கிம் மாநில ஆளுநரான ஓம் பிரகாஷ் மாத்தூர் பதிவியேற்றார். கேரள லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சௌமென் சென் புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கேரளம் மாநிலத்தின் ஆளுநராகவும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் கேரளம் மாநில ஆளுநராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூரை நியமித்து உத்தவிட்டப்பட்டிருந்தது.

om prakash mathur
om prakash mathurpt web

இதையடுத்து கேரளம் மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்க ஓம் பிரகாஷ் மாத்தூர் திருவனந்தபுரம் மாவட்டத்திக்கு நேற்று வருகை தந்தார். அதை தொடர்ந்து இன்று கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள லோக் பவன் மாளிகையில் கேரளம் மாநிலத்தில் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார்.

கேரளம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சௌமென் சென் அவர்கள் கேரள மாநில ஆளுநராக ஓம்பிரகாஷ் மாத்தூருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிறந்தார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டுவந்தார். பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். ஓம் பிரகாஷ் மாத்தூர் கடந்த 2024ஆம் ஆண்டு சிக்கிம் மாநில ஆளுநராக பதவியேற்றார். இன்று கேரளம் மாநில ஆளுநராக பதவியேற்றார். நிகழ்ச்சியில் கேரளம் முதல்வர் சதீசன் பலர் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com