கணவர் - விபின் பாத்தி மனைவி -
கணவர் - விபின் பாத்தி மனைவி - முகநூல்

உத்தர பிரதேசம் | வரதட்சணை புகாரில் கைதான கணவன் மீது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன?

வரதட்சணை புகாரில் கைதான கணவன் தப்ப முயன்ற போது போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து,14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தனர்..
Published on
Summary

உத்தர பிரதேசத்தில் வரதட்சணை விவகாரத்தில் மனைவியை எரித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்ட நபர் காவல் துறை பிடியிலிருந்து தப்ப முயற்சித்தபோது சுடப்பட்டார்.

நொய்டாவில் வசிக்கும் விபின் பாத்தி (VIPIN BHATI) என்ற நபர் தன் மனைவியை அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விபின் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் போலீஸிடம் இருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காவலர்கள் சுட்டதில் அவருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிக்கியின் மாமியார் கைது
நிக்கியின் மாமியார் கைதுமுகநூல்

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில், கடந்த வியாழக்கிழமை கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் உள்ள விபின் பாத்தி வீட்டில் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கி தீ வைத்து கொலை செய்ததாக தெரியவந்தது.. இந்த சம்பவத்தின் கொடூரமான வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.. அந்த வீடியோவில் கணவர் நிக்கி தனது மனைவியை மாடி படிக்கட்டுகளில் தள்ளி தீயில் எரிப்பது போல் காணப்பட்டது.

கணவர் - விபின் பாத்தி மனைவி -
விஜயகாந்தை விஜய் சொந்தம் கொண்டாடுவதா? பிரேமலதா விஜயகாந்த் கருத்து

இந்த சம்பவம் குறித்து , விபினின் சகோதரனை மணந்த பெண்ணின் சகோதரி காஞ்சன்போலீசாரிடம் கூறுகையில், “ , ”ஸ்கார்பியோ, புல்லட் பைக், தங்கம் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் உள்ளிட்ட அனைத்தும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருந்தது.. ஆனால் மேலும் ரூ.36 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என நிக்கியின் மாமியார் மற்றும் கணவர் கேட்டு அவளை சித்திரவதை செய்தனர்” என அவர் கூறினார் .

நிக்கியும் விபினும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், திருமணமான ஆறு மாதங்களுக்குப் பிறகு, கணவரான விபின் வரதட்சணை கேட்டு அவளை சித்திரவதை செய்யத் தொடங்கினார் என்றும் காஞ்சன் போலீசாரிடம் கூறினார்.

மேலும் கடந்த வியாழக்கிழமை தனது கண்களுக்கு முன்பாக நடந்த பயங்கரத்தை அவள் விரிவாக போலீசாரிடம் கூறினாள்.. அதில், மாமியார் வீட்டாரால் நிக்கி தாக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அன்றிரவு அவள் கொல்லப்பட்டதாகவும் கூறினாள். அப்போது அவர்கள் நிக்கியை என் கண் முன்னாலும், என் குழந்தைகள் முன்னாலும் கொடூரமாகத் தாக்கினர். பின்னர் அவர்கள் அவள் மீது சிறிது திரவத்தை ஊற்றி, என் கண் முன்னாலேயே தீ வைத்துக் கொளுத்தினர். நான் அவளைக் காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை," என்று காஞ்சன் போலீசாரிடம் கூறினார்.

இந்நிலையில் தான் நிக்கியின் தந்தை, கொலையாளிகளான, அவர்களைச் சுட வேண்டும், அவர்களின் வீடு இடிக்கப்பட வேண்டும். என் மகள் ஒரு பார்லர் நடத்தி தன் மகனை வளர்த்து வந்தாள். அவர்கள் அவளை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டனர்.. முழு குடும்பமும் இந்த சதியில் ஈடுபட்டது என புகார் தெரிவித்துள்ளார்.

கணவர் - விபின் பாத்தி மனைவி -
HEADLINES|ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு முதல் உக்ரன் அதிபரின் வருகை வரை

இந்நிலையில் இதுதொடர்பாக விபின் கைது செய்யப்பட்டார்.. அப்போது அவர் போலீஸிடம் இருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே அவரை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சனின் புகாரின் அடிப்படையில், நிக்கியின் கணவரை தொடர்ந்து அவரது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

நிக்கி 2016 இல் விபினை மணந்தார், இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com