HEADLINES|ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு முதல் உக்ரன் அதிபரின் வருகை வரை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஒருவாரத்துக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வரவுள்ளார். இதற்கான பயணத் தேதியை இறுதிசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஒருவாரத்துக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழர் என்ற முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நோயாளி இல்லாமல் பழனிசாமியின் பிரசாரத்தின்போது 108 ஆம்புலன்ஸ் வந்ததால், அதை மறித்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கென சிறப்பு நலத்திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
கர்நாடகா தர்மஸ்தலா கோயில் சர்ச்சையில் புகார் அளித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தியா வரவுள்ளார். இதற்கான பயணத் தேதியை இறுதிசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம் ஏழைகளின் வாக்குகளைத் திருட பாஜக முயற்சி செய்வதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில், முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் புஜாரா அறிவித்துள்ளார்.