கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: “சிபிஐ-தான் விசாரிக்க வேண்டும்” மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்pt web

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியினர் ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் மாநில காவல்துறை விசாரித்தால் உண்மைகளை முழுமையாக வெளியே கொண்டுவரமுடியாது என தெரிவித்தார். எனவே இதை சிபிஐ விசாரிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
“கலெக்டர் சொன்னது பொய்.. 24 மணி நேரமும் கள்ளச் சாராயம் கிடைக்கும்”- விஷ சாராயத்தால் பலியானவர் மனைவி!

கூட்டணி கட்சி ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் பட்டியலின மக்கள் உயிரிழந்த பின்னரும் காங்கிரஸ் கட்சி மெளனம் காப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com