இன்ஸ்டாகிராம்முகநூல்
இந்தியா
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ளுபவரா நீங்கள்? அப்போ...இது உங்களுக்கான செய்தி!
இன்ஸ்டாகிராம் தலைவர் மொசெரி வெளியிட்டுள்ள பதிவில், யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாவில் 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பயனர்கள் பதிவேற்றலாம் என தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ளுபவரா நீங்கள். அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானதுதான்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தலைவர் மொசெரி வெளியிட்டுள்ள பதிவில், யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாவில் 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பயனர்கள் பதிவேற்றலாம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது. அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்த புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ளது.