டாக்கிங் பரிசோதனை
டாக்கிங் பரிசோதனைஎக்ஸ் தளம்

டாக்கிங் பரிசோதனை: வரலாறு படைத்த இந்தியா!

விண்வெளியில் டாக்கிங் செய்த நான்காவது நாடு என்கிற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
Published on

பி.எஸ்.எல்.வி சி 60 ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து டாக் ஆனது. இதன்மூலம் செயற்கைக்கோள்களுக்கு இடையே மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் விண்வெளியில் டாக்கிங் செய்த நான்காவது நாடு என்கிற வரலாற்றுச் சாதனையை இந்தியா பெற்றுள்ளது. இதுபற்றி விரிவாக அறியலாம்...

கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் தேதி டி.எஸ்.எல் வி.சி 60 ராக்கெட் மூலமாக இந்தியாவின் முதல் டாக்கிங் பரிசோதனை செயற்கை கோள்களான SpaDex பூமியில் இருந்து 470 கிலோ மீட்டருக்கு உயர்த்தப்பட்டது. ஜனவரி 7ஆம் தேதி காலை 9 மணிக்கு இரண்டு செயற்கைக்கோள்களும் இணைக்க திட்டமிடப்பட்ட நிலையில் இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைப்பதற்கான சரியான முடக்கம் கிடைக்காத காரணத்தினால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நான்கு முறை டாக்கிங் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அத்தனையும் ஒத்திப்போன நிலையில், இன்று காலை எட்டு மணி அளவில் டார்கெட் மற்றும் சேஸர் செயற்கைக்கோள்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. 15 மீட்டர் இடைவெளியில் இருந்து மூன்று மீட்டராக குறைக்கப்பட்ட பின்னர் இரண்டு செயற்கைக்கோள்களின் கலன்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தன. இதையடுத்து, டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இஸ்ரோ.

டாக்கிங் செயற்கைக்கோள்களை இணைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் செயற்கைக்கோள்கள் இணைவதற்கு தொடர்ச்சியாக சமிக்கைகள் அனுப்பிய யூஎஸ் ராவ் விண்வெளி மையத்தின் இயக்குனர் சங்கரன் மற்றும் ஸ்டேடஸ் திட்ட இயக்குனர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக டாக்கிங் பரிசோதனையில் வெற்றி பெற்ற நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com