’கருணைக்கொலை’ இறப்பிலும் பிரியாத தம்பதி! மனைவியுடன் கையோடு கைகோர்த்து மரணித்த முன்னாள் பிரதமர்!

நெதலர்லாந்தின் முன்னாள் பிரதமரான ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரே தருணத்தில் கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து தம்பதிகள்
நெதர்லாந்து தம்பதிகள்facebook

நெதலர்லாந்தின் முன்னாள் பிரதமரான ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரே தருணத்தில் கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

93 வயதான நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களாக உடல்நடல் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் தங்களை கருணை கொலை செய்யவேண்டும் என்று அரசிடம் முறையிட்டு இருந்ததாகவும் தெரிகிறது.

இதன் அடிப்படையில், நெதர்லாந்தில் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள கருணை கொலை சட்டத்தினைபடி, பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி யூஜெனி இருவருக்கும் ஒரே நேரத்தில் விஷ ஊசி செலுத்தப்பட்டு இரட்டை கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ட்ரைஸ் வான் அக்ட்க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இவரது மனைவி யூஜெனியும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், இறப்பிலும் இணைப்பிரியா தம்பதி என்ற வகையில் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இருந்தாலும், இவர்களின் பிரிவு அப்பகுதியில் பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ட்ரைஸ் வான் அக்ட்?

பதவியை விட்டு விலகியும் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் மாபெரும் மனிதர் என்று குறிப்பிடப்படும் ட்ரைஸ் வான் அக்ட் நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர். இவர் 1977-1982 வரை நெதர்லாந்தின் பிரதமராக இருந்துள்ளார். மேலும், கிறிஸ்துவ ஜனநாயக முறையீட்டு கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். பாலஸ்தீனர்களின் உரிமைகாக போராடும் உரிமைகள் மன்றத்தினை 2009 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். தனது மனைவியின் மீது அதீத காதல் கொண்ட இவர், அவரை எப்பொழுதும் ’my girl’ என்றுதான் குறிப்பிடுவாராம்.

நெதர்லாந்து தம்பதிகள்
மீண்டுமொரு இந்தியர் சுட்டுக் கொலை.. அமெரிக்காவில் தொடர்கதையாகும் மரணங்கள்!

சட்டம்

தம்பதியாக கருணை கொலை செய்வதற்கு 2020 முதல் நெதர்லாந்தில் சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, 2020ல் 26 தம்பதியும், 2021 ல் 32 தம்பதியும், 2022 ல் 58 தம்பதியும் இதுவரை கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com