"எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" - நேதாஜியும், உலகப் பயணங்களும்!

"எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" - நேதாஜியும், உலகப் பயணங்களும்!
"எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" - நேதாஜியும், உலகப் பயணங்களும்!

சுபாஷ் சந்திர போஸ் 23 ஆம் தேதி, ஜனவரி மாதம் 1897 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம், ஒரிசா மாநிலம் கட்டாக்கில் ஒரு பெரிய செல்வச்செழிப்பான பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜானகிநாத் போஸ்” தாயின் பெயர் “பிரபாவதி” ஆவார். இவர்கள் இருவருக்கும் ஒன்பதாவது மகனாக இவர் பிறந்தார். ஆங்கிலோ சென்ட்ரிக் கல்வியை ஆரம்பகாலமாகப் பெற்றார் சுபாஷ். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வ பக்தி மிக்கவராகவும் இருந்தார்கள். இவர் ஆரம்பம் முதலே சுறுசுறுப்பும் தைரியம் நிறைந்தவராக காணப்பட்டார்.

படிப்பில் படுசுட்டியாக வளர்ந்த சுபாஷ்!

சிறுவயது முதலே விவேகானந்தர் போன்றவர்களின் ஆன்மீக கருத்துக்களை உள்வாங்கினார். 1909 இல் 12 வயதான சுபாஸ் போஸ் தனது ஐந்து சகோதரர்களைப் போலவே, கட்டாக்கில் உள்ள ரேவன்ஷா கல்லூரிப் பள்ளியில் சேர்ந்தார். இங்கு, பெங்காலி மற்றும் சமஸ்கிருதமும் கற்பிக்கப்பட்டது, அவரது மேற்கத்திய கல்வியை கற்றாலும், அவர் இந்திய ஆடைகளை அணிந்து மத ஊகங்களில் ஈடுபடத் தொடங்கினார். மேலும், பெங்காலி ஆன்மீகவாதியான ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அவரது சீடர் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்கள் கேட்டறிந்தார். சுபாஷ் தனது படிப்பில் கவனம் செலுத்துவதற்கும், போட்டியிடுவதற்கும், தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு திறனை வெளிப்படுத்தினார். 1912 இல், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்பட்ட மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். கோட்ஸ் சேர்ச் கல்லூரியில் இளங்கலை பட்டத்தை பயின்றார்.சுபாஸ் சந்திர போஸ் 23 ஜனவரி 1897 - 18 ஆகஸ்ட் இல் அவர் ஒரு இந்திய தேசியவாதியாக விளங்கினார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை கட்டாக் இல் உள்ள “பாக்டஸ் மிசன் ஆரம்ப கல்லூரியில்” பயின்றார். தனது 1913 இல் கொல்கத்தா றேவன்ஸா கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். கல்வியில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தார். கல்லூரிக்குப் பிறகு 1919 இல் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க ஜ.சி.எஸ் தேர்வுக்காக லண்டன் சென்று கல்வி கற்று திரும்பினார். 1919 இல் நடந்த “ஜாலியன் வாலாபாக் சம்பவம்” இவரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட செய்தது.

தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுபாஷ்!

இந்திய நாட்டுக்கான விடுதலைக்காக இவர் “வியன்னா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து, கங்கேரி, இத்தாலி, ஜேர்மனி, அவுஸ்ரேலியா” போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். தங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலேயர்களிடம் வேலை செய்ய கூடாது என கருதி தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 1921 இல் இந்தியாவுக்குத் திரும்பிய போஸ், மகாத்மா காந்தி தலைமையிலான தேசியவாத இயக்கத்திலும், இந்திய தேசிய காங்கிரஸிலும் சேர்ந்தார். அவர் ஜவஹர்லால் நேருவைத் தொடர்ந்து காங்கிரசுக்குள் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கினார், ஆனால், இது உட்கட்சியினரிடையே உட்பூசலை அதிகரித்தது. காந்தி, பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சமஸ்தானங்களின் எதிர்கால கூட்டமைப்பு மீது, போஸின் அகிம்சையின் எதிரான அணுகுமுறை மற்றும் தனக்கென அதிக அதிகாரங்களை பெறுவதற்கான அவரது திட்டங்கள் குறித்து, காங்கிரஸ் தலைமை மத்தியில் அவர் மீது அதிருப்தி வளர்ந்தது, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்ததால், போஸ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், இறுதியில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

காந்தி வழியில் உடன்பாடில்லை! ஹிட்லருடன் சந்திப்பு!

பின்னர் “சீ ஆர் தாஸ்” என்பவரை தனது அரசியல் குருவாக கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். காந்தி போன்ற தலைவர்களின் அமைதி உடன்படிக்கைகளில் இவருக்கு உடன்பாடு இருக்கவில்லை.

இதனை தொடர்ந்து 1941 உலகப்போர் நடந்த காலகட்டம் அது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஏப்ரல், 1941 இல் போஸ் ஜெர்மனிக்கு வந்தார், ஜெர்மனியின் “ஹிட்லர்” போன்ற தலைவர்களையும் சந்தித்து பேசி ஆதரவையும் பெற்றார். பெர்லினில் இலவச இந்திய மையத்தைத் திறந்தார். சுதந்திர இந்திய படையணி ஒன்று அங்கு உருவாக்கப்பட்டு , சுபாஸ் சந்திர போஸின் கீழ் பணியாற்றுவதற்காக [Generalfeldmarschall Erwin Rommel ] ஜெர்மனிய படைத்தலைவர் எர்வின் ரோமலின் ஆப்ரிகா கோர்ப்ஸால் கைது செய்யப்பட்ட இந்திய போர்க் கைதிகளில் சுமார் 3,000 பேர் விடுதலை பெற்று சுதந்திர இந்திய படையில் இனைந்தனர்.

நீர்மூழ்கி கப்பலுடன் ஜப்பான் பயணம்!

1942 காலத்தில், ஜெர்மன் இராணுவம் ரஷ்யாவில் சிக்கியது. அச்சமயம், போஸ் தென்கிழக்கு ஆசியாவிற்கு செல்ல ஆர்வமாக இருந்தார், போஸின் இவ்விருப்பத்திற்கு ஏற்ப, அடால்ஃப் ஹிட்லர் 1942 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் போஸுடனான ஒரே சந்திப்பின் போது, போஸின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நீர்மூழ்கிக் கப்பலை ஏற்பாடு செய்தார். போஸ் அதில் பயணப்பட்டு, பிறகு அவர் ரகசியமாக, மடகாஸ்கருக்கு அப்பால் ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாற்றப்பட்டார். அதில் பயணித்த அவர், மே 1943 இல் ஜப்பானியரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமத்ரா தீவில் இறங்கினார். அங்கு, ஜப்பானிய ஆதரவுடன், சிங்கப்பூர் போரில் ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய இராணுவத்தின் இந்திய போர்க் கைதிகளை உள்ளடக்கிய இந்திய தேசிய இராணுவத்தை (INA) போஸ் மறுசீரமைத்தார். ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு தற்காலிக சுதந்திர இந்தியா அரசாங்கம் அறிவிக்கப்பட்டது. பெயரளவில் போஸ் தலைமை தாங்கினார். போஸ் எப்பொழுது போலவே மிகத்திறமைவாய்ந்த இராணுவ வீரராக இருந்தபோதிலும், ஜப்பானியர்கள் அவரை இராணுவத் திறமையற்றவராகவே கருதினர்.  இதுவும் ஒரு காரமாக அவரது படைகளில் வீரர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

”அகிம்சை போதாது - தீவிரவாத கொள்கைகளே தீர்வு”

1944 இன் பிற்பகுதியிலும் 1945 இன் முற்பகுதியிலும், இந்தியா மீதான ஜப்பானிய தாக்குதலை இந்திய இராணுவம் மாற்றியது. 1944 இல் பர்மாவில் இருந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்தார். ஏறக்குறைய பாதி ஜப்பானியப் படைகளும், அதில் பங்கேற்ற INA குழுவும் கொல்லப்பட்டன. மீதமுள்ள INA வீரர்கள் மலாய் தீபகற்பத்தில் விரட்டப்பட்டு, சிங்கப்பூர் மீண்டும் கைப்பற்றப்பட்டு ஜப்பானிய படை சரணடைந்தது. சோவியத் யூனியனில் தனது படைகளை உருவாக்க விரும்பி, போஸ் மஞ்சூரியாவுக்கு தப்பிச் செல்ல நினைத்தார்.

ஏனினில் அது பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு மாறியதாக அவர் நம்பினார். உலக நாடுகளின் பலம் பொருந்திய தலைவர்களை சந்தித்து பேசி இந்தியாவின் சுதந்திரத்துக்கான சாத்தியங்களை ஆலோசித்தார். சுதந்திரத்தை அடைய பலம் பொருந்திய இராணுவம் ஒன்றை அமைக்க துணை நாடுகளின் உதவியை நாடினார். இவ்வாறு அவர் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்தியாவை சுதந்திரம் அடைய அகிம்சை மட்டும் போதாது என்பதை இவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆங்கில அரசின் அராஜகங்களுக்கு எதிராக ஒரு தீவிரவாத கொள்கையோடு இவர் பயணித்தார்.

"எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" 

1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.  சுபாஷ் சந்திர போஸின் ராணுவம் பின்னடைவை சந்தித்தபோதிலும், அவரால் ஆசாத் ஹிந்த் இயக்கத்திற்கு இதர நாடுகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஜூலை 4, 1944 அன்று பர்மாவில் நடைபெற்ற இந்தியர்களின் பேரணியில் இந்திய தேசிய இராணுவத்திற்கான ஊக்கமளிக்கும் உரையில் தமது பிரபலமான வாசகங்களை உதிர்த்தார்.  "எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" என்று ஆவேச உரையாற்றினார். இதில், அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு இந்திய மக்களை வலியுறுத்தினார்.

இந்தியர்களின் பலத்தை உலகுக்கு காட்டிய “இரும்பு மனிதர்” என இவர் போற்றப்படுகின்றார். ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் அவர் பயணித்த அதிக சுமை ஏற்றப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏற்ப்பட்ட மூன்றாம் நிலை தீக்காயங்களால் அவர் இறந்தார் என்று செய்திகள் வெளிவந்தன. இவரது போராட்டங்களும், காந்தி தலைமையிலான அமைதி வழி போராட்டங்களுக்கும் சேர்ந்து  இந்தியாவிற்கு, 1947 இல் சுதந்திரம் கிடைத்தது. பிறகு இந்தியா சுதந்திர குடியரசாக மாறியது. நேதாஜியின் கனவும் நிஜமானது.

நேதாஜி இறக்கவே இல்லை; நீண்ட நாட்களாக நம்பாத ஆதரவாளர்கள்!

ஆனால், 1945 இல் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக வந்த செய்தி இவரின் போராளிகள் நம்பவில்லை. இவர் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிலர் நேதாஜி இந்தியாவில் உயிருடன் வாழ்ந்து வந்ததாகவும், இந்திய விடுதலைக்கு பிறகு ஆன்மீகத்தை வழிபற்றியதாகவும் செய்திகள் பலவாறு இன்றும் பேசபட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com