\
Neha Bora says on Indias Gen-Z Revolution
Neha Bora ANI

இந்தியாவில் GEN-Z புரட்சி.. வழிகாட்டியது யார்? நேஹா போரா பேச்சால் சர்ச்சை!

இந்திய இளைஞர் இயக்கங்களுக்கு வங்கதேச GEN_Z போராட்டம் வழிகாட்டியதாக நேஹா போரா கருத்து தெரிவித்துள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

இந்தியாவில் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு வங்கதேச இளைஞர்களின் போராட்டம்தான் வழிகாட்டியாக இருந்ததாக அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது. இந்தப் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய இளைஞர்களும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதாக நேஹா போரா கூறியுள்ளார்.

Neha Bora
Neha Bora Reuters

அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிட்ட வீடியோ செய்தியில் பேசிய அவர், வங்கதேசப் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தற்போது நடைபெறும் இளைஞர் இயக்கங்களுக்கு வங்கதேசத்தில் தொடங்கிய ஜென்-ஸி (Gen-Z) இயக்கம் வழிகாட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கியது என்றும், இந்தியாவில் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத அடிப்படைவாதத்திற்கு எதிராக வங்கதேச இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கும், இந்திய இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாக நேஹா போரா கூறினார்.

CJP protest
CJP protestANI

நேஹா போராவின் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவராகக் கூறப்படும் நேஹா போரா, வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் நோக்கம் அரசியல் எதிர்ப்பு மட்டுமல்ல, ஆட்சி மாற்றம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் முதலில் அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தொடங்கியது. பின்னர் அது அரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறியது. இதன் விளைவாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இந்த நிலையில், வங்கதேசப் போராட்டத்தை இந்தியாவுக்கு முன்மாதிரியாக நேஹா போரா குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Neha Bora says on Indias Gen-Z Revolution
கரப்பான் கட்சிக்கு வெளிநாட்டு நிதி? பற்றவைத்த அமெரிக்க பாடகி.. அபிஜித்தை வளைக்கும் பாஜக?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com