\
 CJP Foreign Funding Row BJP Woos Abhijit
Abhijeet DipkeANI

கரப்பான் கட்சிக்கு வெளிநாட்டு நிதி? பற்றவைத்த அமெரிக்க பாடகி.. அபிஜித்தை வளைக்கும் பாஜக?

’இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே அரசு விசாரணை அமைப்புகளையும், வெளிநாட்டுப் பிரபலங்களின் கருத்துகளையும் பாஜக அரசு பயன்படுத்துகிறது’ என கருத்து தெரிவித்துள்ளன.
Published on: 
Summary

காக்ரோச் ஜனதா கட்சியின் வெளிநாட்டு நிதி குறித்து குறித்து அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் (Mary Millben) குற்றஞ்சாட்டியிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கரப்பான் கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவும் பதிலடி கொடுத்திருப்பது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2026 மே மாதத்தில் அபிஜித் தீப்கே என்பவரால் சமூக வலைத்தளத்தில் நையாண்டி அரசியல் கட்சியாக தொடங்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி, இன்று இளைஞர்களின் அரசியல் இயக்கமாக உருவெடுத்திருப்பதுடன், மத்திய அரசுக்கு எதிராக போராட்டக்களத்தையும் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னத்தாக, இவ்வியக்கத்தின் போராட்டம் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானையே பதவி விலகும் வைக்கும் அளவுக்கு இழுத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் சூடுபிடித்துள்ளது.

Mary Millben
Mary Millbenani

இந்தச் சூழலில்தான் காக்ரோச் ஜனதா கட்சியின் வெளிநாட்டு நிதி குறித்து குறித்து அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் (Mary Millben) குற்றஞ்சாட்டியிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தவும் அமெரிக்க நன்கொடையாளர்கள் சிலர் அபிஜித் தீப்கேவுக்கு நிதி உதவி அளித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்த அபிஜித், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினருக்கு யார் உரிமை கொடுத்தது? எங்கள் சொந்தப் பிரச்னைகளைக் கையாள எங்களுக்கு முழுத் திறன் உள்ளது; நாட்டின் விவகாரங்களில் அந்நியர்களின் தலையீடு தேவையில்லை” எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் மீண்டும் விடாத மில்பென், ’பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு ஆதரவு தேவையில்லை; அவருக்கு இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு இருக்கிறது. தீப்கேவின் போராட்டங்கள் தோல்வியடையும்போது அவரது அமெரிக்க நன்கொடையாளர்கள் அவரைக் கைவிட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் பெற்ற கல்வியை ஆக்கப்பூர்வமான முறையில் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்’ என்றும் பதிலடி கொடுத்தார்.

Abhijeet Dipke
Abhijeet Dipkeani

இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் நிலையில், மத்திய அரசும், பாஜகவினரும் இந்த விஷயத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர். பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்துகொண்டு வெளிநாட்டு ஆதரவோடு நாட்டைச் சீர்குலைக்க சிஜேபி முயல்வதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள அபிஜித், “மத்தியில் பாஜக அரசு ஆட்சியிலிருக்கும்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடிப் பார்வையில் நாட்டின் எல்லைகளும் நிதி அமைப்புகளும் இருக்கும்போது, சட்டவிரோதமாக எப்படி வெளிநாட்டுப் பணம் நாட்டிற்குள் நுழைய முடியும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ’இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே அரசு விசாரணை அமைப்புகளையும், வெளிநாட்டுப் பிரபலங்களின் கருத்துகளையும் பாஜக அரசு பயன்படுத்துகிறது’ என கருத்து தெரிவித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com