நீட் விவகாரம்: ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே அணைக்கப்பட்ட மைக்

நீட் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தவைலர் ராகுல்காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நீட் விவகாரம்
நீட் விவகாரம்Facebook

நீட் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தவைலர் ராகுல்காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மக்களவை கூடியதும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

நீட் விவகாரம்
நீட் தேர்வு - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமது மைக் அணைக்கப்பட்டதாகவும், மீண்டும் இணைப்பு கொடுக்கும் படியும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், மைக்குகளுக்கு தாம் பொறுப்பாளர் இல்லை என ஓம் பிர்லா அலட்சியமாக பதில் அளித்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோல், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே பேசும்போது, அவரது மைக்கும் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com