நீட் தேர்வு - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், “நீட் தேர்வை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு முறை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய சட்டமுன் வடிவு நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com