ncert sets up committee amid controversy over class 8 history map article
ncertடைம்ஸ் நவ்

8ம் வகுப்பு பாடத்தில் வரலாற்றுப் பிழை.. சுட்டிக்காட்டிய அரச குடும்பம்.. குழு அமைத்த NCERT!

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மராட்டியப் பேரரசு சித்தரிக்கப்படுவது குறித்த விவாதம் அதிகரித்துவரும் நிலையில், NCERT ஒரு மறுஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.
Published on

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பிழை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அடிக்கடி பாடத் திட்டம் நீக்கம் சம்பந்தமாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்ததும் அதற்கு முன்பு, ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் இந்தியில் பெயர் இடம்பெற்றிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அடுத்து சமீபத்தில், டெல்லி சுல்தானியம் மற்றும் முகலாயர் காலத்தில் மத சகிப்பின்மை இருந்த பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக வெளியிடப்பட்ட 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், குறிப்பாக மராட்டியப் பேரரசின் கீழ் இருந்த ராஜஸ்தானின் சில பகுதிகளைக் காட்டும் வரைபடம் குறித்து பெறப்பட்ட கருத்துகளை மறுபரிசீலனை செய்ய தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஒரு குழுவை அமைத்துள்ளது. முன்னாள் ஜெய்சால்மர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சைதன்ய ராஜ் சிங் சமூக ஊடகங்களில் ஆட்சேபனைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, இந்த படம் வரலாற்று ரீதியாக தவறாக வழிநடத்தும் என்றும் நம்பகமான ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை என்றும் கூறி இந்த பிரச்னை வெளிச்சத்திற்கு வந்தது.

ncert sets up committee amid controversy over class 8 history map article
முகலாயர் கால வரலாறு.. 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் NCERT திருத்தம்!

சுட்டிக்காட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜெய்சால்மர்

இதுகுறித்து ஜெய்சால்மர் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வைத்த பதிவில், ”இதுபோன்ற சரிபார்க்கப்படாத மற்றும் வரலாற்றுரீதியாக ஆதாரமற்ற தகவல்கள் NCERT போன்ற நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல், நமது புகழ்பெற்ற வரலாறு மற்றும் பொது உணர்வுகளையும் புண்படுத்துகின்றன. இந்தப் பிரச்னை வெறும் பாடப்புத்தகப் பிழை அல்ல. மாறாக, நமது முன்னோர்களின் தியாகங்கள், இறையாண்மை மற்றும் வீரம் நிறைந்த கதையை களங்கப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற சரிபார்க்கப்படாத மற்றும் வரலாற்றுரீதியாக ஆதாரமற்ற தகவல்கள் NCERT போன்ற நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல், நமது புகழ்பெற்ற வரலாறு மற்றும் பொது உணர்வுகளையும் புண்படுத்துகின்றன.
ஜெய்சால்மர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்
வரைபடத்தின் துல்லியத்தைச் சரிபார்க்க மேலும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிழைகள் உறுதிசெய்யப்பட்டால், எதிர்கால பதிப்புகளில் வரைபடம் திருத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்
மைக்கேல் டானினோ, NCERTஇன் சமூக அறிவியலுக்கான பாடத்திட்டக் குழுவின் தலைவர்

பிழை குறித்து பதிலளித்துள்ள NCERT

இதற்குப் பதிலளித்துள்ள NCERT, “தற்போது, ஒரு சில பாடப்புத்தகங்களில் உள்ள கல்வி உள்ளடக்கம் குறித்து NCERT கருத்துகளைப் பெற்றுள்ளது. எனவே, அதன் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, மூத்த நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக NCERTஇன் சமூக அறிவியலுக்கான பாடத்திட்டக் குழுவின் தலைவரான மைக்கேல் டானினோ, “வரைபடத்தின் துல்லியத்தைச் சரிபார்க்க மேலும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிழைகள் உறுதிசெய்யப்பட்டால், எதிர்கால பதிப்புகளில் வரைபடம் திருத்தப்பட்டு புதுப்பிக்கப்படும். கேள்விக்குரிய வரைபடத்தில் நேரடி மராட்டிய ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகள் மட்டுமல்லாமல், மராட்டியருடன் தற்காலிக ஒப்பந்தங்களின்கீழ் அஞ்சலி செலுத்தும் பகுதிகளும் அடங்கும். இந்த வரைபடம், முன்னர் வெளியிடப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. அவை முந்தைய ஆட்சேபனைகள் இல்லாமல் பொதுவில் இருந்தன. பாடப்புத்தக அத்தியாயம் மராட்டிய வரலாற்றில் இரண்டு நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டது. மேலும் ஜெய்சால்மர் அத்தியாயத்திலோ அல்லது வரைபடத்திலோ எங்கும் குறிப்பாக பெயரிடப்படவில்லை. இருப்பினும், குறிப்பிடத்தக்க விடுபாடு என்னவென்றால், வரைபட எல்லைகள் தோராயமானவை என்று கூறும் ஒரு மறுப்பு இல்லாதது. இது 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது 8 ஆம் வகுப்பு பதிப்பிலும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என அவர் ஒப்புக்கொண்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

ncert sets up committee amid controversy over class 8 history map article
7ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகம்.. முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கம்!

இதற்கிடையே, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மராட்டியப் பேரரசு சித்தரிக்கப்படுவது குறித்த விவாதம் அதிகரித்துவரும் நிலையில், NCERT ஒரு மறுஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. கள வல்லுநர்கள் மற்றும் கல்வி ஆசிரியர்களைக் கொண்ட இந்தக் குழு, கிடைக்கக்கூடிய வரலாற்று ஆதாரங்களைப் பயன்படுத்தி இந்த விஷயத்தை ஆராய்ந்து விரைவில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும் என அது தெரிவித்துள்ளது.

ncert sets up committee amid controversy over class 8 history map article
ncertடைம்ஸ் நவ்

சைதன்ய ராஜ் சிங் என்பவர் யார்?

CITTA India என்ற தொண்டு நிறுவனத்தின் கூற்றுப்படி, ”ஜெய்சால்மரின் 44வது மஹாராவல் சைதன்ய ராஜ் சிங் பாட்டி, பல நூற்றாண்டுகளாக ஜெய்சால்மரை ஆண்ட பாட்டி ராஜ்புத் வம்சத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 1993இல் பிறந்த அவருக்கு 31 வயது. அவர் தனது அரச பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் புது டெல்லியில் உள்ள சமஸ்கிருதப் பள்ளியில் படித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் (SOAS) அரசியலைத் தொடர்ந்தார். இப்போது, ஜெய்சால்மர் பகுதியில் நிலையான வளர்ச்சி, பாரம்பரிய மறுசீரமைப்பு, கல்வி மற்றும் நீர் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்” என டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ncert sets up committee amid controversy over class 8 history map article
ஆங்கில பாடப்புத்தகங்களில் இந்தி பெயர்.. சர்ச்சையில் சிக்கிய NCERT!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com