இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக்கோள்..!
30ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தும் நிசார்
நிசார் என்ற அதிநவீன செயற்கைக்கோளை வரும் 30ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது. பூமியை கண்காணிக்கும் இச்செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்விஎஸ்16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமந்து செல்லும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். 2392 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் இரு வேறு அதிர்வெண்களில் செயல்பட்டு பூமியை கண்காணிக்கும் என அவர் கூறினார். நாசாவின் எல் பேண்டு ரேடாரும் இஸ்ரோவின் எஸ் பேண்டு ரேடாரும் இதில் இடம் பெற்றிருப்பதாக நாராயணன் தெரிவித்தார்.
நிசார் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன்
பூமியில் இருந்து 242 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் இச்செயற்கைக்கோள் எந்தகாலநிலையிலும் பூமியின் துல்லியமான படங்களை எடுத்துத்தரும் என்றும் மண்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிய முடியும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். நாசாவுடன் இணைந்து இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் NASA ISROSYNTHETIC APERTURE RADAR என்பதன் சுருக்கமே நிசார் என்றும் நாராயணன் தெரிவித்தார்.
நிசார் என்றால் என்ன? அது என்ன மாதிரியான ஆய்வை செய்ய போகிறது?
நிசார் என்பது நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய குறைந்த பூமி சுற்றுப்பாதை ஆய்வகமாகும். இந்திய விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, NISAR 12 நாட்களில் முழு உலகத்தையும் வரைபடமாக்கும் மற்றும் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பனி வ, தாவர பயோமாஸ், கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் மற்றும் பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலைகள் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிக நிலையான தரவை முழுமையாக வழங்கும்.
இது குறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இது ஒரு எல்-மற்றும் எஸ்-பேண்ட், உலகளாவிய, மைக்ரோவேவ் இமேஜிங் பணியை செய்யும். இது முழு துருவமுனை மற்றும் இன்டர்ஃபெரோமெட்ரிக் தரவைப் பெறுவதற்கான திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே தளத்திலிருந்து எஸ்-பேண்ட் மற்றும் எல்-பேண்ட் எஸ். ஏ. ஆர் மூலம் பெறப்பட்ட தரவு, கிரக பூமியில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசார் முதல் 90 நாட்கள் அறிவியல் நடவடிக்கைகளுக்கான ஆய்வகத்தை நடத்தும்
இஸ்ரோவின் கூற்றுப்படி, ஏவப்பட்ட முதல் 90 நாட்கள், அறிவியல் நடவடிக்கைகளுக்கான ஆய்வகத்தை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நிசார் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிசார் செயற்கைக் கோளை கடந்த 2023ம் ஆண்டில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளிப்போனது. தொடர்ந்து செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் ரேடார் ஆண்டெனா ரிப்ளக்டரில் சில தொழில் நுட்பக் குறைபாடுகள் கடந்தாண்டு கண்டறியப்பட்டன. அதனை இப்போது விஞ்ஞானிகள் சரி செய்து ஏவ உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.