வி.நாராயணன்முகநூல்
இந்தியா
இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன்!
2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய நாராயணன், கரக்பூர் ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றவர். இந்நிலையில், இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணனுக்கு, முன்னாள் தலைவர் சோம்நாத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் முன் உள்ள புதிய விண்வெளித்திட்டங்கள், விண்வெளியில் மிதக்கும் ஆராய்ச்சி மையம் அமைப்பது போன்ற திட்டங்களில் இவரின் தலைமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.