நாக்பூர் | குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. என்று தீரும் இந்த அவலம்?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது குதிரை சவாரி அகாடமி ஒன்று. இங்கு கடந்த மே 17 ஆம் தேதி 30 வயதுடைய நபர் ஒருவர், குதிரை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கிட்டிகாடன் பகுதியில் உள்ள குதிரையேற்ற அகாடமியில் இந்த கொடூரம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து குதிரை சவாரி அகாடமியின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்துள்ள புகாரில், ”குற்றம்சாட்டப்பட்ட சோத்யா சுந்தர் கோப்ரகடே இரவில் யாரும் இல்லாத நேரத்தில் சவாரி வளாகத்தில் அத்துமீறி நுழைவதை அங்கிருந்த எங்களின் பாதுகாவலர் கண்டுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல் அளித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அகாடமியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், குதிரையை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் பதிவாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.