”அயோத்தியை போன்றே இஸ்லாமியர்கள் வாரணாசியையும் மதுராவையும் விட்டுக்கொடுக்க வேண்டும்”- தேவிகிரி மகராஜ்

"இந்த இடங்களையும் நீங்கள் அமைதியான முறையில் விட்டுக்கொடுத்தால் மற்ற விஷயங்கள் பற்றி நாங்கள் உங்களிடம் வலியுறுத்தமாட்டோம்" - தேவிகிரி மகராஜ்
வாரணாசி
வாரணாசிPT

அயோத்தியைத் தொடர்ந்து, காரணம், வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, ஞானவாபி மசூதியில், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்ளால் வழிபாடு நடத்தப்பட்டது.

பிப்ரவரி 2ம் தேதி ஞானவாபியின் இஸ்லாமியர்களின் பொதுசெயலாளரான ஜாமியத் உலமா ஐ ஷிந்த், மற்றும் மௌலானா ஹக்கிமுதீன் காஸ்மி ஆகியோர், ஞானவாபி மசுதி கட்டும் முன் அந்த இடத்தில் ஹிந்து கோவில் எதுவும் இல்லை, அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வலியுறுத்தி உள்ளார்.

ஜாமியத் உலமா ஐ ஷிந்த்
ஜாமியத் உலமா ஐ ஷிந்த்PT

இதனிடையில் நேற்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தின் பொருளாளார் கோவிந்த் தேவ் கிரி மகராஜ் என்பவர் புனேயில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ”அந்நிய படையெடுப்பால் இந்தியாவில் கிட்டத்தட்ட 3500 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது, இதில் இந்துக்களின் முக்கியமானதாக கருதப்படும் அயோத்தி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய இடங்களும் ஒன்று. இதில் அயோத்தியை போன்றே காசி மற்றும் மதுராவை இஸ்லாமிய சமூகம் இந்துக்களுக்கு அன்புடனும் அமைதியான முறையில் விட்டுக்கொடுக்கும் படியும் கேட்டுள்ளார். இஸ்லாமியர்களில் ஒரு சிலரை தவிற மற்றவர்கள் இதற்கு சம்மதிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் பொழுது, ”அயோத்தி விவகாரத்தில் நாங்கள் உங்களிடம் அமைதியான தீர்வைக்கண்டோம். அதே போல் இந்த இடங்களையும் நீங்கள் அமைதியான முறையில் விட்டுக்கொடுத்தால் மற்ற விஷயங்கள் பற்றி நாங்கள் உங்களிடம் வலியுறுத்தமாட்டோம்.

தேவிகிரி மகராஜ்
தேவிகிரி மகராஜ்PT

எதிர்காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையக வாழவேண்டும். இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையாக இதைக் கருதக்கூடாது” என்று தேவ்கிரி மகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com