\
Mumbai-Ahmedabad Bullet Train Project: Power Supply Work Intensifies
Mumbai-Ahmedabad Bullet Train ProjectNHSRCL

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்.. மின் விநியோகப் பணி தீவிரம்!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் மின் விநியோகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Published on: 

இந்தியாவின் அதிவேகப் போக்குவரத்துத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக விளங்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் மின் விநியோகப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் 508 கி.மீ தூரமுள்ள மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில், ரயில்கள் மணிக்கு 320 கி. மீ வேகத்தில் தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதற்காக மேம்பட்ட மின் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. தேசிய மின் கட்டமைப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வழங்கிட, இந்த முழுப் பாதையிலும் மொத்தம் 14 டிராக்ஷன் துணை மின்நிலையங்கள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மஹாராஷ்டிராவில் 5 துணை மின்நிலையங்களும் குஜராத்தில் 9 துணை மின்நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

கோப்புபடம்
கோப்புபடம்ANI

இதில், குஜராத்தில் உள்ள பிலிமோரா துணை மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ரயில் நிலையங்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் பராமரிப்பு டெப்போக்களின் பயன்பாட்டுக்காக கூடுதலாக 16 விநியோக துணை மின்நிலையங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கையாக நிலநடுக்கங்களை நொடிகளில் கண்டறிந்து ரயில்களை உடனடியாக நிறுத்தக்கூடிய அதிநவீன நிலநடுக்கமானி கருவிகளும் இந்த துணை மின்நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mumbai-Ahmedabad Bullet Train Project: Power Supply Work Intensifies
விமானப்படை புதிய தலைமை தளபதி.. இன்று பதவியேற்பு!! யார் இந்த அசுதோஷ் தீட்சித்?