பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்துவதாக எம்ஆர்பிஎல் நிறுவனம் அறிவிப்பு
பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்துவதாக எம்ஆர்பிஎல் நிறுவனம் அறிவிப்புweb

கர்நாடகா| கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பு.. பெட்ரோல் ஏற்றுமதி நிறுத்தம்.. MRPL அவசரநிலை அறிவிப்பு!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள MRPL நிறுவனம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான பெட்ரோல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாது என அவசரநிலையை அறிவித்துள்ளது.
Published on
Summary

கர்நாடக மாநிலத்தில் உள்ள MRPL நிறுவனம், கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாது என 'ஃபோர்ஸ் மெஜூர்' அவசரநிலை அறிவித்துள்ளது. இதனால், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் (MRPL), மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தனது பெட்ரோல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாது என 'ஃபோர்ஸ் மெஜூர்' எனும் சட்டப்பூர்வ அவசரநிலையை அறிவித்துள்ளது.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை
ஈரான் - ஹார்முஸ் நீரிணை

மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் வரும்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்துஇந்தியாவுக்குவர வேண்டிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. MRPL நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் சுமார் 40 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது கச்சாஎண்ணெய் வரத்து குறைந்திருப்பதால், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என கைவிரித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்துவதாக எம்ஆர்பிஎல் நிறுவனம் அறிவிப்பு
’ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..’ உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான்!

'ஃபோர்ஸ் மெஜூர்' எனும் சட்டப்பூர்வ அவசரநிலை என்றால் என்ன?

இயற்கைச்சீற்றம் அல்லது போர் போன்ற மனிதக்கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாதபோது, இந்தச் சட்ட விதியைப்பயன்படுத்தி அபராதம் ஏதுமின்றி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்த முடியும். இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்களில் 40% பகுதியை மேற்காசிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றன.

தற்போது இந்தியாவில் சுமார் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்புஉள்ளதாகஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா அல்லது வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்து மாற்று வழிகளில் கச்சா எண்ணெயைப்பெற இந்தியா முயற்சித்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பங்குகளில் கூட்டம் அதிகரித்து வரும்நிலையில், MRPL நிறுவனத்தின் இந்தஅறிவிப்பு ஏற்றுமதியை மட்டுமே குறிக்கிறது. உள்நாட்டு விநியோகத்தைப் பொறுத்தவரை அடுத்த சிலவாரங்களுக்குப் போதுமான இருப்பு இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்துவதாக எம்ஆர்பிஎல் நிறுவனம் அறிவிப்பு
2-ஆம் உலகப்போருக்கு பின்.. மீண்டும் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம்! சுக்குநூறான ஈரான் போர்க்கப்பல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com