\
MP wildlife sos facing allegations leopard poaching illegal elephant trade
Model ImageGoogle Gemeni

சிறுத்தை வேட்டை முதல் யானை கடத்தல் வரை.. சர்ச்சையில் சிக்கி நிற்கும் மத்தியப் பிரதேசம்!

வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியக (WCCB) ஆவணங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் இவ்வமைப்பின் தொடர்புடைய எண்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Published on: 
Summary

சிறுத்தை வேட்டை, நேபாளத்தில் இருந்து யானை வாங்கிய விவகாரம் என மத்தியப் பிரதேசத்தின் வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் (Wildlife SOS) என்ற வனவிலங்கு தொண்டு நிறுவனம் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திலும் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி - மோரேனா வனப்பகுதியில் கடந்த மாதம் 10-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், மாநில புலிகள் வேலைநிறுத்தப் படை (STSF), வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் ஊழியர்களான பகவான் சிங் (என்ற சலீம்) மற்றும் அவரது கூட்டாளி வசீம் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தியது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் (Wildlife SOS) தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கார்த்திக் சத்தியநாராயணன் மற்றும் அதன் ஊழியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வழக்கில் தன்னைக் கைது செய்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கார்த்திக் சத்தியநாராயணன் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அவரை கைது செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Model image
Model imageANI

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேரடி யானை வர்த்தக வழக்கிலும் இவ்வமைப்பின் பெயர் தொடர்படுத்தப்பட்டிருப்பது, மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

MP wildlife sos facing allegations leopard poaching illegal elephant trade
ம.பி| அந்தரங்க உறுப்புக்கு 1 கோடி.. இன்ஸ்டா வதந்தியால் நடந்த கொடூரம்! நாட்டையே உலுக்கிய சம்பவம்!

மார்ச் 2022-ல், ஜெய்ப்பூரில் 30 கிலோ தந்தங்களுடன் மூன்று நபர்களை வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரிகள் கைது செய்தனர். நேபாள எல்லையிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, பல லட்சம் ரூபாய்க்கு கைமாற்றப்பட்ட ஒரு யானை விவகாரத்தில், வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் அமைப்பின் முன்னாள் ஊழியர் சூரஜ் பால் மற்றும் அதன் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் பைஜு ராஜ் ஆகியோரின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியக (WCCB) ஆவணங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் இவ்வமைப்பின் தொடர்புடைய எண்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் அமைப்பு, யானை கடத்தலில் கைதானதாகக் கூறப்படும் சூரஜ் பால் என்பவருடனான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு நிறுவனம் பொறுப்பாகாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

MP wildlife sos facing allegations leopard poaching illegal elephant trade
ம.பி. |குரோர்பதியில் ரூ.50 லட்சம் வென்ற வட்டாட்சியர்.. வெள்ள நிவாரண நிதியில் ரூ.2.57 கோடி கையாடல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com