“அரசு மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை” மணிப்பூரில் இருந்து எம்.பி. கனிமொழி பேட்டி!

மணிப்பூர் கள நிலவரம் குறித்து எம்.பி கனிமொழி பேட்டி

மணிப்பூர் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள கள நிலவரம் குறித்து புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது நம்மிடையே பேசிய அவர்,

“மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அரசு மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு பால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

manipur
manipurpt desk

மிக மோசமான ஒரு சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. ‘எங்களை பாதுகாக்க அரசு எதுவுமே செய்யவில்லை’ என எங்கு போனாலும் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் இருக்கிறது. அதையும் அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை” என்றார். இவரின் பேட்டியை, செய்தியில் இணைக்கப்படும் வீடியோவிலும் காணலாம்.

mp kanimozhi
மணிப்பூர் சென்ற INDIA கூட்டணி குழு: ஆளுநரைச் சந்தித்து புகார்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com