கூகுளில் அதிகம் தேடிய நபர்கள்முக்நூல்
இந்தியா
2024 Rewind : இந்த வருடம் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய நபர்கள் யார் யார் தெரியுமா?
2024ஆம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், 3ஆவது இடத்தில் சிராக் பஸ்வானும் இடம்பிடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதேப் போன்று ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிக நபர்களால் தேடப்பட்டவையில் ஐபிஎல் தொடர் முதலிடத்திலும், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டாவது இடத்திலும், 3ஆவது இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது.