காலை தலைப்புச் செய்திகள் | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதல் டெஸ்ட் தோல்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை... முதற்கட்ட ஆலோசனை சுமூகமாக நடந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.

  • “மகாத்மா காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என வன்மம் கலந்த நோக்கத்துடன் ஆளுநர் கூறியிருக்கிறார்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

  • தமிழக கிராமங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை... மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களை சென்றடைகிறதா என்றும் கேள்வி.

  • மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக இன்று ஆலோசனை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்து விவாதிக்க திட்டம்.

  • எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தூக்கி எறிவார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்.

  • செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் குவிந்த 30 ஆயிரம் நெல் மூட்டைகள். போதிய இடவசதி இல்லாததால் நெல் மணிகளை திறந்த வெளியில் வைத்த விவசாயிகள்.

  • சத்தியமங்கலம் அருகே தகர கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை.

  • பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார் நிதிஷ் குமார். பாஜகவின் விஜய்குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுதரி துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்பு.

  • பீகாரில் ஆட்டம் இன்னும் முடியவில்லை என ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் சூசகம். மக்கள் தங்கள் பக்கம் நிற்பதாகவும் பேட்டி.

  • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com