morning headlines for march 14th 2026
மோடி, விஜய்எக்ஸ் தளம்

HEADLINES | டெல்லி செல்லும் விஜய் முதல் மத்திய அரசின் விளக்கம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டெல்லி செல்லும் விஜய் முதல் மத்திய அரசின் விளக்கம் வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய் முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பாக மத்திய அரசின் விளக்கம் வரை விவரிக்கிறது.

  • வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை; மக்கள் பதற்றப்பட தேவையில்லை... வணிக சிலிண்டர் விநியோகத்தில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என மாநில அரசே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு விளக்கம்...

  • ஹோர்முஸ் நீரிணையை இரண்டு இந்திய கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல்... எரிவாயு ஏற்றி வரும் கப்பல்களால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு சிக்கல் தீரும் என எதிர்பார்ப்பு...

  • மேற்காசிய நாடுகளில் இருந்து 78 சிறப்பு விமானங்களை இயக்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு... டெல்லி, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று விமானச் சேவை தொடங்கும் எனவும் தகவல்...

  • உலகளாவிய பொருளாதாரம் மற்றும் போர் நெருக்கடியை சமாளிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நிதி உருவாக்கம்... மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த துணை மானிய கோரிக்கை நிறைவேற்றம்...

  • இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு... கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய முதலீடு வெளியேற்றம் ஆகியவை காரணம்...

morning headlines for march 14th 2026
ஏர் இந்தியாPt web
  • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணத்தை உயர்த்தியது இண்டிகோ நிறுவனம்... எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் 425 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என அறிவிப்பு...

  • கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு 3ஆவது முறையாக ஆஜராகும் தவெக தலைவர் விஜய்... தனி விமானத்தில் இன்று டெல்லி செல்லவிருப்பதாக தகவல்...

  • சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பரப்புரை செய்யப்போவதாக பெங்களூரு புகழேந்தி பேட்டி... 2026 தேர்தலோடு அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் கதை முடிந்துவிடும் என விமர்சனம்...

  • மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் காவல் நிலைய மரண சம்பவத்தில் 6 காவலர்கள் சஸ்பெண்ட்... காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம்...

  • அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல்... இந்திய கடற்படையில் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என தகவல்...

morning headlines for march 14th 2026
கரூர் துயரம் | சிபிஐ விசாரணையில் விஜய் நாளை பங்கேற்கவில்லை?.. பேச்சு வார்த்தையில் என்.டி.ஏ.?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com