HEADLINES | விஜய் தலைமையிலான தவெக கூட்டம் முதல் போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு வரை!
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு... குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தகவல்...
முன்னாள் முதல்வர்கள் எதிர்கொள்ளாத நெருக்கடிகளை தாம் எதிர்கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு... ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரத்தில், விளக்கம் அளிப்பதாகவும் கருத்து...
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு... பணி நிறைவுத் தொகையையும் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்... சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
17 நாட்களாக நடைபெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு... முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து முடிவு...
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை கைவிட வேண்டும்... பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...
அதிமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தர்மர்... பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கட்சியில் ஐக்கியம்...
சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு... ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்துவரும் நிலையில் முக்கியத்துவம் பெற்ற ஆலோசனை...
கோவை தெற்கு, மதுரை மத்தி, ஆலந்தூர் உள்ளிட்ட 15 தொகுதிகளில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் விருப்பம்... திமுக தலைமையிடம் பட்டியலை வழங்க உள்ளதாக தகவல்...
மாமல்லபுரத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்... கூட்டணி நிலைப்பாடு, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு...
திமுக ஆட்சியை அகற்ற தவெக தலைவர் விஜய்யால்தான் முடியும் என செங்கோட்டையன் உறுதி... விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் பேட்டி...
எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டம்... விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்...
விஜய்யை டெல்லிக்கு அழைத்தது கூட்டணிக்கு அழைப்பதற்காக அல்ல.... தங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு...
பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது... தமிழக மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என செல்வப்பெருந்தகை அறிக்கை...
தமிழ்நாட்டை போராட்டக்களமாக்கியதும், ஊழலில் திளைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை... சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிக்கை...
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இடையே நடந்த பிரச்சினை பங்காளி சண்டை அல்ல... பங்கு வைப்பதில் ஏற்பட்ட சண்டை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்...
பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர்கள் இருவர் காயம்... ரவுடி வெள்ளைக்காளி உள்ளிட்ட இருவரை காவலர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றபோது தாக்குதல்...
குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகும் மாநிலங்கள்... டெல்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களில் மூவர்ணங்களில் ஒளிரும் அரசு அலுவலகங்கள்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தயாராகி வரும் மத்திய அரசு... வரும் 27ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு...
உலக நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்... ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணிநியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...
எங்கெல்லாம் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடக்கிறதோ; அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடந்து வருவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு... எஸ்.ஐ.ஆர். பெயரில் குஜராத்தில் நடப்பது நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு எனவும் விமர்சனம்...
ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு... பனிப்பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்...
அமெரிக்காவை நெருங்கி வரும் அதிபயங்கர பனிப் புயல்... பல்வேறு மாகாணங்களில் சாலைகள் முதல் குடியிருப்பு வரை குவிந்துள்ள பனியால் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
ஈரானுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றம்... தீர்மானத்திற்கு எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட 7 நாடுகள் வாக்களிப்பு...
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தகவல்... ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரிதும் குறைத்துக்கொண்டதாகவும் பேச்சு...
முழு பலத்தையும் திரட்டி போரிடுவோம் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை... தங்கள் நாட்டு கப்பல் வளைகுடாவை நோக்கி விரைவதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் பதில்...
பிப்ரவரி 1ஆம் தேதி ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையில் நடைபெறுகிறது மூன்றாம்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை... அமைதி முயற்சிக்கு மத்தியில் உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்...
உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டதன் எதிரொலி... பாகிஸ்தான் அணியை அனுப்புவது குறித்து அந்நாட்டு அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை என தகவல்...
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், டெய்லர் ஃப்ரீட்ஸ் வெற்றி... மகளிர் பிரிவில் போலாந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் வாங் ஜிங்யூ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார் முன்னாள் நம்பர் ஓன் வீராங்கனை நயோமி ஓசாகா... உடல்நலக் குறைவால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத சூழல் என விளக்கம்...
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடக்கும் மெல்போர்ன் நகரில் சுட்டெரிக்கும் வெயில்... குடைகள், தண்ணீர் தெளிப்பான் உள்ளிட்டவை நிறுவி ரசிகர்களை காக்க சிறப்பு ஏற்பாடுகள்...
இந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ‘கிங்’ திரைப்படம்... வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புடன் படக்காட்சிகளையும் வெளியிட்டது படக்குழு...

