மோடி, மாவோயிஸ்ட்
மோடி, மாவோயிஸ்ட்Pt Web

HEADLINES | தமிழகம் வரும் பிரதமர் மோடி முதல் ஜார்க்கண்ட்டில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகம் வரும் பிரதமர் மோடி முதல் ஜார்க்கண்ட்டில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை வரை விவரிக்கிறது.
Published on

மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி... தேர்தலையொட்டி பலம் காட்ட தயாராகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி...

மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டணி கட்சிகளின் கொடிகள், பேனர்கள்... தொண்டர்களின் வசதிக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கைகள், 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணி....

2026 தேர்தல் என்பது, ஆரிய திராவிட போரின் மற்றொரு களம்... இனம், மொழி, நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் மடல்...

தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் சர்ச்சைக்குள்ளான ஆளுநர் உரை... சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே தீர்வு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

முதல்வர் மு.க ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின்x

23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது திமுக அரசுதான்... ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் உறுதி...

விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு... சட்டமன்றத்தில் இன்று சிறப்புத் தீர்மானம் கொண்டுவர முடிவு...

தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு... கொசுக்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமர்சனம்...

கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வுசெய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைப்பு கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை...

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வுடன் உதயநிதி பேசி வருவதாக பியூஷ் கோயல் குற்றச்சாட்டு... நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளானவரை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தல்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தனி சின்னத்தில் போட்டியிடும்... பியூஷ் கோயலுடனான சந்திப்புக்கு பின் ஜி.கே.வாசன் அறிவிப்பு...

பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்தார் ஜான் பாண்டியன்... 10 தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளதாக பேட்டி...

மதுராந்தகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் மாம்பழ சின்னம்... பிளவுபட்ட பாமகவில் யாருக்கு சின்னம் என முடிவாகாத நிலையில் அன்புமணி படத்துடன் இடம்பெற்ற மாம்பழம்...

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ்Pt web

ஒருவருக்கொருவர் உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்தால் அந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும்? தஞ்சை திமுக மகளிரணி மாநாட்டு திடலை பார்வையிட்ட பின்னர் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கனிமொழி பேட்டி...

முதல் தேர்தலிலேயே விஜய்யின் தவெகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு... தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றது தவெக...

குறைந்தபட்சம் 5 விழுக்காடு சட்டமன்ற தொகுதிகளில் தவெக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை... தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிப்பு...

தவெக அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது... ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில் என தவெக தலைவர் விஜய் அறிக்கை...

2026 சட்டமன்ற தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது... தவெகவுக்கு சின்னம் வழங்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி பதிவு...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கீடு... கடந்த சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்...

கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த தங்கம் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்தது... சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை...

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்.... சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய காவல் துறையினர்...

sabarimala
சபரிமலைweb

ஜார்க்கண்ட் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 15 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு... ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கியத் தலைவர் பதிராம் மாஞ்சியும் சுட்டுக்கொலை...

காஷ்மீரில் 200 அடி ஆழ மலைப் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து... 10 வீரர்கள் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 11 வீரர்களுக்கு சிகிச்சை...

16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணி தொடக்கம்... 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு...

ஐநாவுக்கு போட்டியாக உருவாகிறதா ட்ரம்ப் தலைமையிலான அமைதி வாரியம்... பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் நாடுகளைத் தொடர்ந்து இஸ்ரேலும் இணைந்தது...

காஸாவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதால், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிப்பு... பாதிக்கப்பட்ட மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஐநா தகவல்...

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் கடுமையான மின்வெட்டு... ரயில்களில் ஏறி செல்போன்களுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளும் மக்கள்...

இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது அஜித்தின் மங்காத்தா திரைப்படம்... 15 ஆண்டுகளுக்கு பிறகு விநாயக் மகாதேவை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்...

மோடி, மாவோயிஸ்ட்
’விசில்’ சின்னம்| தலைவர் விஜய் தேர்வுசெய்த வெற்றி சின்னம்.. தவெக நிர்வாகிகள் மகிழ்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com