தவெகவின் விசில் சின்னம் வெற்றி சின்னம் என நிர்வாகிகள் பேச்சு
தவெகவின் விசில் சின்னம் வெற்றி சின்னம் என நிர்வாகிகள் பேச்சுweb

’விசில்’ சின்னம்| தலைவர் விஜய் தேர்வுசெய்த வெற்றி சின்னம்.. தவெக நிர்வாகிகள் மகிழ்ச்சி!

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
Published on
Summary

2026 சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது தவெகவின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. தலைவர் விஜயின் விருப்பமான இந்த சின்னம், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் என துணை பொதுச்செயலர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்PTI

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை என 10 விருப்ப சின்னங்களைக் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தவெகவினரின் மிகவும் விருப்பப்பட்ட சின்னமான விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தவெக போட்டியிடவிருக்கிறது. இருப்பினும் இது இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே இந்த சின்னம் என்றும், தவெக போட்டியிடாத தொகுதிகளில் மற்றவர்களுக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தவெகவின் விசில் சின்னம் வெற்றி சின்னம் என நிர்வாகிகள் பேச்சு
தவெகவில் தனக்கு பிரச்னையா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செங்கோட்டையன்!

விசில் சின்னம்.. தலைவர் விஜயின் தேர்வு..

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் துணை பொதுச்செயலர் நிர்மல் குமார், ’விசில் சின்னம் எங்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர் மிகவும் விரும்பிய சின்னம், இச்சின்னத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். விசில் சின்னம் நிச்சயம் வெற்றி சின்னமாக இருக்கும் என தெரிவித்தார்.

விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில்,விசில் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி. இது தான் வெற்றி சின்னம். எங்கள் கட்சி தலைவர் சொன்ன அடுத்த நிமிடமே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்’ என பேசியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் கூறுகையில், தவெகவினர் விருப்பப்பட்ட விசில் சின்னம் கிடைச்சது அவர்களுக்கு முதல்கட்ட வெற்றி, அவர்களால் இந்த சின்னத்தை எளிதாக கொண்டு சேர்க்க முடியும். விஜயகாந்த் கூட இரண்டு சின்னங்களில் போட்டியிட்டார், ஆனால் விஜய் ஒரே சின்னத்துடன் களமிறங்கவிருப்பது அவர்களுக்கு சாதகமானது தான் என்று பேசியுள்ளார்.

தவெகவின் விசில் சின்னம் வெற்றி சின்னம் என நிர்வாகிகள் பேச்சு
’சத்தம் பத்தாது விசில் போடு..’ தவெகவிற்கு ’விசில்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com