Pt Headlines
Pt HeadlinesPt web

Headlines | திமுக இளைஞர் அணி மாநாடு முதல் டி20 உலகக்கோப்பை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திமுக இளைஞர் அணி மாநாடு முதல் டி20 உலகக் கோப்பை வரை விவரிக்கிறது.
Published on

விருதுநகரில் இன்று நடைபெறுகிறது திமுக இளைஞரணி மாநாடு... வீடியோ வெளியிட்டு திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது ‘2.0’ அல்ல; வெறும் பூஜ்ஜியம் தான் என எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம்... 5 ஆண்டு ஆட்சியில் மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையையே திமுக செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு...

அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமையாக மாறிவிட்டார்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்...

திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் கம்யூனிஸ்ட்டுகள்... மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலர்கள் புதிய தலைமுறைக்கு பேட்டி...

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்X

ஆட்சியில் அதிகாரம் கேட்பது காங்கிரஸின் உரிமை என பீட்டர் அல்போன்ஸ் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி... திமுகவை மதிப்பதாகவும், அதே சமயம் காங்கிரஸுக்கு என நிலைப்பாடு இருக்கக்கூடாதா என்றும் கேள்வி...

தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் ஒருதரப்பினர் விரும்புவதாகவும் பீட்டர் அல்போன்ஸ் தகவல்... பாஜகவையும் மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக விளக்கம்...

ஜனநாயகத்தில் விவாதங்கள் இயல்பு என மாநிலங்களவை உரை குறித்து கமல்ஹாசன் கருத்து... ஒட்டுமொத்த இந்தியாவுடன்தான் தனது கூட்டணி, கூட்டணியைவிட கொள்கையே முக்கியம் எனவும் பேட்டி...

சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது தேமுதிக... பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்...

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறக்குவிந்த கூட்டம்... வாகனங்களை வீடுகள் முன்பு நிறுத்தி தவெகவினர் இடையூறு செய்வதாக அப்பகுதியினரின் புகாரால், நேரில் வர வேண்டாம் என ஆனந்த் வேண்டுகோள்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்ததன் பின்னணியை உடைத்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்... அமித் ஷாவின் அழைப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்தின் பேரிலேயே கூட்டணியில் இணைந்ததாக புதிய தலைமுறைக்கு பேட்டி...

விஜய்யின் தாக்கம் திமுகவையே அதிகம் பாதிக்கும்... ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என டிடிவி தினகரன் நம்பிக்கை...

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்x

இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியை அறிவிப்போம்... தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா பேட்டி...

மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி... விரைவில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றும் நம்பிக்கை...

புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்ற மாநில அமைப்பாளர் சிவா பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்... 8% ஓட்டு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா, 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா? என மாணிக்கம் தாகூர் கேள்வி...

புலி படத்தின் வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது செல்லும்... காலதாமதமான நடவடிக்கை எனக்கூறி விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் 13 பேர் பணியிட மாற்றம்... ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு...

2024 மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் அறிவிப்பு... பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு விருது அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

இரவிலும் தொடர்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்... காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் உயர்வு... ஒரு சவரன் ஒரு லட்சத்து 14ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...

தங்கம் மற்றும் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளிfacebook

வெள்ளி விலை கிலோவுக்கு 20ஆயிரம் ரூபாய் சரிவு... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கு விற்பனை...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. அறிவிப்பு... வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 25 சதவிகிதமாகவே தொடரும்...

எம்.பிக்களின் அமளியால் 5ஆவது நாளாக முடங்கியது மக்களவை... வரும் திங்கள்கிழமை வரை அவை ஒத்திவைப்பு...

தேர்வு நேர பதற்றத்தை குறைக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்... சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என அறிவுரை...

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல்... மைக்ரோ பிளாஸ்டிக் குறித்து குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு...

இத்தாலியின் மிலன் நகரில் கோலாகலமாக தொடங்கியது குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள்... 90 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு...

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்... குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழப்பு... 170க்கும் மேற்பட்டோர் காயம்...

மொரோக்கோவில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.... வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு...

ஓடிடி தளத்தில் வெளியானது நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்... ஜனவரி 10ஆம் தேதி திரையரங்கில் வெளியான நிலையில் ஓடிடி தளத்திலும் வெளியீடு...

டி 20 உலகக்கோப்பை
டி 20 உலகக்கோப்பைPt web

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது டி20 உலகக்கோர்ப்பை தொடர்... மீண்டும் கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை...

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகல்... காயம் காரணமாக விலகிய நிலையில், முகமது சிராஜ் அணியில் சேர்ப்பு...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை 6ஆவது முறையாக வென்றது இந்தியா... வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளுக்கு 175 ரன்கள் விளாசி இந்திய வெற்றிக்கு உறுதுணை...

Pt Headlines
T20 WC| ஹர்ஷித் ராணா அதிகாரப்பூர்வமாக விலகல்.. அணியில் இணையும் முகமது சிராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com