Headlines | பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் TO தவெக 3 ஆம் ஆண்டு தொடக்க விழா.!
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 7 வழித்தடங்களில் அதிவேக ரயில்கள்... அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு...
அரியவகை தாது வழித்தட திட்டத்துக்கு 40ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு... தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரியவகை தாது வழித்தடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு...
தமிழ்நாட்டில் பொதிகை மலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சுற்றுலா மேம்பாடு... ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு...
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு... வரி தாக்கல் செய்யும் போது தவறான தகவல்கள் அளித்தால் 100 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை...
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50% ஆக உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை... நிதிப் பகிர்வு விகிதம் 41% ஆக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை... தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தில் செல்ல வாய்ப்பு...
ஆர்பிஐ மூலமாக இல்லாமல் பங்குச் சந்தை மூலம் தங்கப் பத்திரங்கள் வாங்குவோர்களுக்கான வரிச் சலுகை ரத்து... பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் தங்கப் பத்திர முதலீட்டாளர்கள் அதிர்ச்சி...
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... சென்செக்ஸ் 1,546 புள்ளிகளும், நிஃப்டி 495 புள்ளிகளும் சரிந்தது...
2047இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையிலான மத்திய பட்ஜெட்... பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவு...
வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கண்டுகொள்ளாத பட்ஜெட்... மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு... உரிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் விமர்சனம்.
எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள ஒன்றிய பட்ஜெட்... இந்த முறை திருக்குறள்கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்...
மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு... பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவை குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றும் அறிக்கை...
அதிமுக என்பது தனி கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்... தோல்வி உறுதி என்பதால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்துள்ளதாகவும் சாடல்...
திமுக கூட்டணியை பிளவுப்படுத்த சூழ்ச்சி நடப்பதாக திருமாவளவன் பேச்சு... ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என செல்வப்பெருந்தகை நம்பிக்கை...
தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது... புதிய தலைமுறை நேர்காணலில் தவெக பரப்புரைச் செயலர் நாஞ்சில் சம்பத் தகவல்...
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி... பனையூரில் நடைபெறும் விழாவில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்கிறார்...
ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் தேமுதிக சிம்ம சொப்பனமாக விளங்குகிறது... கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு.
தைப்பூசத்தையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் தரிசனம்... திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி கோயில்களில் குவிந்த கூட்டம்...
அமெரிக்காவில் தொடரும் பனிப்புயல் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி... புகழ்பெற்ற நயாகரா அருவி உறையத் தொடங்கி இருப்பதால், காண குவியும் சுற்றுலா பயணிகள்...
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அணி... இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடாது என பாகிஸ்தான் அரசு அறிவிப்பு...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வென்றார் ஸ்பெயினைச் சேர்ந்த இளம் வீரர் கர்லோஸ் அல்காரஸ்... 25ஆவது கிராண்ட்ஸ்லாமை எதிர்நோக்கிய ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்...

