Headlines | 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தம் முதல் பிரான்ஸ் அதிபரின் வருகை வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தம் முதல் பிரான்ஸ் அதிபரின் வருகை வரை விவரிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடமாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு... ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை மாற்றம் செய்ய ஆணை..
வரும் 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை... தலைமைச் செயலர், நிதித் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்பு...
பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை... தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் திமுக அறிவிப்பு....
வரும் 14ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா சேலம் வருவதாக தகவல்.. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜகவின் மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டம்..
கோவை, திருப்பூரில் இன்று முதல் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படும்... நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு...
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு... நாளை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு..
உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இனி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது என யோகி ஆதித்யநாத் பேச்சு...
அரசு முறை பயணமாக வரும் 17ஆம் தேதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்...
காதலர் தினத்தையொட்டி ’மின்னல்’, ’மௌனம் பேசியதே’ஐ தொடர்ந்து ’காதலர் தினம்’ படமும் ரீ-ரிலீஸ்...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் அமெரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி

