\
எல்லை பிரச்னை அதிகரிக்க கூடும்: ராணுவ தளபதி தகவல்

எல்லை பிரச்னை அதிகரிக்க கூடும்: ராணுவ தளபதி தகவல்

எல்லை பிரச்னை அதிகரிக்க கூடும்: ராணுவ தளபதி தகவல்
Published on

டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்துள்ளது. இந்தியாவும் அங்கு படைகளை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என்றார். சீனாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும் எனவும், எல்லையை கைப்பற்றுவதில் உள்ள போட்டி தொடர்ந்துகொண்டே இருக்கும்‌ எனவும் அவர் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com