“நிலவுக்கு இந்து ராஷ்ட்ரா என பெயரிட வேண்டும்; அதேபோல்..” - இந்து மகாசபைத் தலைவர் கோரிக்கை!

நிலவுக்கு இந்து ராஷ்ட்ரா என பெயரிட வேண்டும் என்றும் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதி அதன் தலைநகராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து இந்திய இந்து மகாசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்து மகாசபைத் தலைவர்
இந்து மகாசபைத் தலைவர்pt web

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் திட்டமிட்டபடி விண்ணில் தரையிறங்கியது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி எனப் பெயரிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். சிவசக்தி என பெயரிட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் நிலவுக்கு குறிப்பிட்ட நாடு பெயரை வைக்கலாமா என்ற விவாதமும் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டுள்ளது.

chandrayaan 3
chandrayaan 3pt web

இந்நிலையில் நிலவுக்கு இந்து ட்ராஷ்ட்ரா என பெயரிட வேண்டும் என்றும் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதியை அதன் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய இந்து மகாசபைத் தலைவர் சக்கரபாணி மஹாராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எந்த பயங்கரவாதிகளும் அங்கு சென்றுவிட முடியாதபடி அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிலவை இந்து சனாதன ராஷ்ட்ராவாகவும், சந்திரயான் 3 தரையிறங்கிய சிவசக்தி என பெயரிடப்பட்டுள்ள இடத்தை அதன் தலைநகராகவும் உருவாக்க வேண்டும். அப்படியானால் ஜிகாதி மனநிலை கொண்ட யாரும் அங்கு செல்ல முடியாது என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com